கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்... 155 வாக்குகள் மட்டுமே பெற்று பிக்பாஸ் பிரபலம் படுதோல்வி!
மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் 20ம் தேதி ஒரே கட்டமாக நடத்தப்பட்ட நிலையில் அதில் பதிவான வாக்குகள் இன்று நவம்பர் 23ம் தேதி சனிக்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன.
தேர்தலில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைவிடவும் பாஜக தலைமையிலான கூட்டணி அசுர வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது. இந்நிலையில் வெர்சோவா தொகுதியில் ஆஷாத் சமாஜ் கட்சி சார்பில் பிரபல டிவி நடிகரும், பிக்பாஸ் போட்டியாளருமான அஜாஸ் கான் போட்டியிட்டிருந்தார். இந்நிலையில் அஜாஸ்கான் 155 வாக்குகளை மட்டுமே பெற்று படுதோல்வியை தழுவியுள்ளார். அதேசமயம் நோட்டாவுக்கு 1298 வாக்குகள் கிடைதுள்ளது.
இதேத்தொகுதியில் சிவசேனை (உத்தவ் தாக்கரே) வேட்பளார் ஹரூன் கான் 65000 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தேர்தலில் தோல்வியுற்ற அஜாஸ் கானை இன்ஸ்டாகிராமில் 56 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது தோல்விக்கு நெட்டிசன்கள் பலரும் பல்வேறு வகையான விமர்சனங்களை செய்து வருகின்றனர்.