அர்னவ் எவிக்ஷன்: கடுப்பான விஜய் சேதுபதி?

 
பிக்பாஸ் 8


பிரபல தனியார் தொலைக்காட்சியில் பிக்பாஸ் 8 நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் 2வது  ஆளாக எவிக்ட் ஆனார், அர்னவ். இவர் நேற்று மேடையில் பேசிய விஷயங்கள் கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.   பிக்பாஸ் 8வது சீசனில் இருந்து புதிய ஹோஷ்டாக விஜய் சேதுபதி செய்து வருகிறார். அதனால் புதிய பிக்பாஸ், புதிய ரூல்ஸ் மற்றும் புத்தம் புது பொலிவுடன் தொடங்கியது. இந்நிலையில் இரண்டாவது வார எவிக்‌ஷனில்அர்னவ் வெளியேறினார். 

பிக்பாஸ் 8 அப்டேட்ஸ் | முதல் நாளே வெளியேறிய போட்டியாளர்... இந்த சீசனின் காதல் ஜோடி யார்?
பிக்பாஸ் 8 நிகழ்ச்சி Boys vs Girls என்ற போட்டி முனைப்புடன் தொடங்கியது. இதனையடுத்து  ஆரம்பித்த முதல் நாளிலேயே எந்த பக்க வீடு உங்களுக்கு வேண்டும் என கேட்டு வர இருவரும் விவாதித்து, ஒரு வழியாக சமாதானம் செய்து, தங்களுக்கான பக்கங்களை தேர்வு செய்து கொண்டனர். முதல் நாள் எபிசோடின் முடிவில் 24 மணி நேரத்திற்குள் ஒருவர் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவார் என அறிவிக்கப்பட்டது.  அதன்படி, பிக்பாஸ் 8 வீட்டின் இளம் போட்டியாளரான சாச்சனா, எவிக்ட் செய்யப்பட்டார். ஆனால் வெளியேறப்பட்ட மறுநாளே இவரை வீட்டிற்குள் கொண்டு வந்து விட்டனர். 
முதல் வார எவிக்ஷனாக, பிக்பாஸ் 8 வீட்டிலிருந்து வெளியேறியவர், ஃபேட்மேன் ரவீந்தர். பிக்பாஸ் போட்டியை ரிவ்யூ செய்து வந்த இவருக்கு, இந்த சீசனில் வாய்ப்பு கிடைத்தது.  
செல்லம்மா தொடரில் நடித்து புகழ் பெற்ற நடிகர் அர்னவ் இந்த வாரம் வெளியேற்றப்பட்டார். வெளியில் இருக்கும் போதே முதல் மனைவியை விட்டு விட்டு, உடன் நடித்த நடிகையை காதலித்த சர்ச்சையில் சிக்கிய இவர், பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் செல்வதற்கு முன்னர் பல சர்ச்சையான விஷயங்களை பேசினார். இதனையடுத்து  வாக்குகள் குறைவாக பெற்ற காரணத்திற்காக இந்த வாரம் நேற்றைய எபிசோடில் எவிக்ட் செய்யப்பட்டார். 

பிக்பாஸ் 8


2வது வாரத்தில் அர்னவ், எவிக்ட் ஆன போது அவரது சக ஹவுஸ் மேட்டும், தோழியுமான அன்ஷிதா தேம்பி தேம்பி அழுதார். அர்னவ், வெளியே வந்ததும்  தனது ஹவுஸ் மேட்ஸிடம் பேசினார். அப்போது, சிலரை குறிப்பிட்ட “ஜால்ரா” என கூறிவிட்டார். மேலும், “என்னடா பண்ணீட்டு  இருக்கீங்க இங்க..க்ரூப் ஃபார்ம் பண்ணவா வந்தீங்க? நான் உங்க கூட பேசலன்றதுக்காக என்ன தள்ளி வச்சுட்டீங்க..” என அவர் பேசிக்கொண்டே போக, அவரை விஜய் சேதுபதி இடைமறித்தார். பின்னர், “உங்களுக்கு அவர்கள் மீது கோபம் இருந்தால் தனியாக பேசிக்கொள்ளலாம். இப்படி வன்மத்தை கக்க கூடாது. அது அநாகரிகமான செயல்” எனக் கூறினார். இதனை அவர் சிரித்துக்கொண்டே சமாளித்தார்.
 

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web