திருவண்ணாமலையில் பெரிய தேர் வெள்ளோட்டம்... வடம் பிடித்த பக்தர்கள்!

 
திருவண்ணாமலை
 


திருவண்ணாமலை மாவட்டம் அருணாசலேஸ்வரர் கோயிலில் ரூ.70 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட பெரிய தோ் என்று அழைக்கப்படும் ஸ்ரீஅருணாசலேஸ்வரா் தேரின் வெள்ளோட்டம் இன்று காலை நடைபெற்று வருகிறது. பெருவாரியான பக்தர்கள் திருவிழாவில் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

தமிழகத்தில் முக்தி தலமாகவும், அக்னி தலமாகவும் விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலாகும். இது சித்தர்கள் பூமி என்றும், சிவனே மலையாக அமர்ந்திருப்பதால் கைலாயத்திற்கு இணையான தலம் என்றும் பக்தர்களால் போற்றப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழாவும் ஒன்றாகும். 

அந்தவகையில், இந்த வருடத்துக்கான கார்த்திகை தீபத் திருவிழா வரும் டிசம்பர் 1-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த விழாவில் 4-ம் தேதியன்று கொடியேற்றமும், 10-ம் தேதி பஞ்சமூர்த்திகள் தேரோட்டமும், 13-ம் தேதி காலையில் கோவிலில் பரணி தீபமும், மாலை 6 மணி அளவில் கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. இந்த விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் துரிதமாக நடைபெற்று கொண்டிருக்கின்றன.

திருவண்ணாமலை

இதையொட்டி அருணாசலேஸ்வரர் தேர் ரூ.70 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்டு உள்ளது. அதைத்தொடர்ந்து இந்த தேர் வெள்ளோட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. அரோகரா முழக்கத்துடன் பக்திப் பரவசத்துடன் பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். 

அருணாசலேஸ்வரர் தேர் 59 அடி உயரமும், 200 டன் எடையும் கொண்டதாகும். இதில் தேவாசனம், நராசனம், சிம்மாசனம் அலங்கார தூண்களில் உள்ள பழுதடைந்தவைகள் மாற்றப்பட்டு உள்ளது. நான்கு கொடுங்கை நிலைகளும் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும் தேரில் அமைக்கப்பட்டு உள்ள பிரம்மா மற்றும் துவார பாலகர் ஆகியவை புதுப்பிக்கப்பட்டு உள்ளது.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web