உஷார்! தர்பூசணி பழங்களில் இனிப்பு ஊசி! கண்டுபிடிக்க சுலபமான வழி! !

 
தர்ப்பூசணி

மக்களே உஷாராக இருங்க... வெப்பத்தை தணிக்க வாங்கி சாப்பிடும் தர்ப்பூசணி பழங்களில் இனிப்பு செலுத்தப்படும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. பல இடங்களில் இப்படி செயற்கையாக சுவைக்காகவும், நிறத்திற்காகவும் ஊசி செலுத்தப்பட்ட பழங்களை சுகாதாரத் துறையினர் பறிமுதல் செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. சரி, அப்படி ஊசி செலுத்தப்படாத தர்ப்பூசணி பழங்களை எப்படி  கண்டுபிடித்து வாங்குவது?

கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் பல பகுதிகளிலும் வெயில் கொளுத்த தொடங்கி இருக்கும் நிலையில் சாலையோரங்களில் தர்ப்பூசணி, இளநீர், நுங்கு, வெள்ளரிக்காய் கடைகள் முளைக்க ஆரம்பித்துவிட்டன.

இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சாலையோரம் விற்பனை செய்யப்பட்ட தர்ப்பூசணி பழங்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் ரசாயனம் கலக்கப்பட்டு இருப்பது தெரிய வந்ததால் 8 டன் தர்பூசணி பழங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. இதனையடுத்து வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ள நிலையில் ரசாயனம் கலந்த தர்பூசணி பழங்களை சாப்பிடுவதால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருக்கிறது என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  தர்ப்பூசணி பழங்களில் ரசாயன கலப்பு இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது என்பது குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். 

தர்ப்பூசணி

வெயில் காலம் தொடங்கி விட்ட நிலையில் மக்கள் குளிர்பானங்கள் பழங்கள் ஆகியவற்றை நாடத் தொடங்கியுள்ளனர். சாலையோரங்களில் தர்பூசணி, கரும்பு ஜூஸ், மோர் உட்பட விற்பனை அதிகரித்துள்ளது. வெயில் நேரங்களில் பயணம் செய்பவர்கள் தர்பூசணி பழங்களை விரும்பி வாங்கி சாப்பிடுவார்கள் என்பதால் சாலையோரங்களில் தர்பூசணி விற்பனை களைகட்ட தொடங்கியுள்ளது. இதனையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் மொத்தமாக தர்ப்பூசணி பழங்களை வாங்கி வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர்.

தர்ப்பூசணி பழங்களை பொறுத்தவரை பார்க்க பெரிதாக சிவப்பாக இருந்தால் தான் வாடிக்கையாளர்கள் அதனை வாங்கி சாப்பிடுவார்கள். வாடிக்கையாளர்களை கவர்வதற்காக ஒரு சில வியாபாரிகள் தர்பூசணி பழங்களின் ரசாயனங்களை ஊசி மூலம் செலுத்தி செயற்கையாக இனிப்பு மற்றும் சிவப்பு நிறத்தை ஊட்டி மக்களுக்கு விற்பனை செய்வது தெரிய வந்துள்ளது.  
உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மொத்தம் 7 கடைகளில் ஆய்வு செய்ததில் 3 கடைகளில் இரசாயண ஊசி செலுத்திய தர்பூசணி பழங்கள் விற்பனை செய்து வந்தது.

மேலும் இனிப்புக்காகவும் சில இரசாயனங்கள் கலந்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரசாயணம் கலந்த தர்ப்பூசணி பழங்கள் எங்கிருந்து வாங்கி வரப்பட்டது என்றும் தனியே விசாரணை நடத்தி வருகின்றனர் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள். இதற்கிடையே, ரசாயன கலப்பு கொண்ட தர்பூசணி பழங்களை சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்து மற்றும் கலப்படத்தை எப்படி கண்டுபிடிப்பது என்பது குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். பொதுவாக தர்ப்பூசணி பழங்களின் சுவையை பார்க்காமல் நிறத்தை பார்த்து அதிக பேர் வாங்குகிறார்கள். இதற்காக சில வியாபாரிகள் ரசாயனயங்களை ஊசி மூலம் செலுத்துகின்றனர்.

தர்ப்பூசணி
இதனால் சாலை ஓரங்களில் வைக்கப்பட்டுள்ள கடைகளை பார்க்கும் வாடிக்கையாளர்கள் அதன் நிறம் மூலம் ஈர்த்து அதனை வாங்கி சாப்பிடுகிறார்கள். மேலும் இனிப்பு சுவைக்காகவும் சில ரசாயனங்கள் சேர்க்கப்படுகிறது. ரசாயனம் கலந்த தர்பூசணி பழங்களை சாப்பிடும்போது காய்ச்சல், தலைவலி, வாந்தி இவைகள் ஏற்படலாம்.

ரசாயனத்தால் அதிகம் குழந்தைகள் தான் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு செரிமான கோளாறு நெஞ்செரிச்சல் போன்றவை உடனடியாக ஏற்படும். தர்ப்பூசணி பழங்களை வாங்கும் முன்பு அதில் எங்காவது துளையிடப்பட்டு இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும். வீட்டுக்கு வாங்கி சென்றாலும் தர்ப்பூசணி பழங்களை சிறிய துண்டுகளாக வெட்டி சுடு தண்ணீரில் போட்டால் அதிலிருந்து நிறம் பிரிந்து செல்லும்.

அப்படி இருந்தால் அது கலப்படம் அல்லது ரசாயண கலப்பு கொண்ட பழம் என்பதை தெரிந்து கொள்ளலாம். மேலும் தர்ப்பூசணி பழங்களை வெட்டி பஞ்சு, டிஷ்யூ பேப்பர் ஆகியவற்றை கொண்டு துடைத்தால் சிவப்பு நிறம் அதில் ஒட்டிக் கொள்ளும். அப்படி இருந்தாலும் அது ரசாயண கலப்பு கொண்ட பழம் தான். எனவே பழங்களை வாங்கிச் செல்லும் போது நிச்சயம் இது போன்ற சோதனைகளை செய்து பார்க்க வேண்டும்” என தெரிவித்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web