இன்று அட்சய திருதியை... இந்த ஹோரையை மிஸ் பண்ணாதீங்க... தங்கம் வாங்க சரியான நேரம், வீட்டில் பூஜை செய்யும் முறை!

 
தங்கம்

இன்று அட்சயத்திருதியை தினத்தில் எப்படி வீட்டில் பூஜை செய்ய வேண்டும்? எந்த நேரத்தில் தங்கம் வாங்கினால் செல்வம் மேலும் சேரும்? என்று பார்க்கலாம் வாங்க. அதற்கு முன்பாக, இன்று நிச்சயம் தங்கம் வாங்கியே தீர வேண்டும் என்பது கிடையாது? இன்று நீங்கள் செய்கிற நல்ல விஷயங்கள் மென்மேலும் பெருகும் என்பதைப் புரிந்து கொள்ளுங்க. ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதத்தின் அமாவாசை அடுத்த வளர்பிறையில்  வரும் 3ம் நாள் வளர்பிறை திருதியை அட்சயத் திருதியை என்கிறோம்.

இந்த நாளில் தொடங்கும் யாவும் வளரும்.பெருகும். தானங்கள் பல கோடி மடங்கு புண்ணியங்களை அள்ளித் தரும். மாதத்திற்கு ஒரு முறை வளர்பிறை திருதியை, ஒரு முறை தேய்பிறை திருதியை வரும். அந்த வகையில் ஒரு ஆண்டில் வரக்கூடிய  24 திருதியை திதிகளில் அட்சயத் திருதியை மிக சிறப்பு வாய்ந்தது. இந்நாளில் தான் குபேரனுக்கு சம்பத்து கிடைக்கப் பெற்றது.கணபதி மகாபாரதம் எழுதத் தொடங்கியதும் இந்த நாளில்தான் அதே போல் இந்நாளில் தொடங்கப்படும் அனைத்தும் பெருகும்,

அட்சய திருதியை

வளரும், காலம் கடந்து நிலைக்கும் என்பது ஐதீகம். செல்வமும் ஞானமும் எப்படி யுகங்கள் கடந்து நிலைத்து நிற்கின்றனவோ நம் வாழ்விலும் இந்நாளில் செய்யும் அனைத்தும் மென்மேலும் வளரும் என்பது நம்பிக்கை. கடந்த சில ஆண்டுகளாக தான் இந்நாளில் வாங்கும் தங்கம் பெருகும் என மக்கள் தவறாக புரிந்து வைத்துள்ளனர். இந்நாளில் செய்யப்படும் தானங்களின் பலனும் பல கோடி புண்ணியங்களை தரவல்லது. 

இந்நாளில் நாம் இறைவழிபாடு  செய்ய வேண்டியது அவசியம். அட்சய திருதியை நாளில் அதிகாலையில் எழுந்து நீராடி  வீடு சுத்தம் செய்து வழக்கமான பூஜை செய்ய வேண்டும்.  கலசம் வைத்துப் பூஜை செய்யும் வழக்கம் உடையவர்கள் பூஜை அறையில் மனைப்பலகையில் வாழையிலை  இட்டு பச்சரிசி பரப்பி, கலசம் வைக்க வேண்டும்.  ஶ்ரீலட்சுமி நாராயணர் படம் அல்லது திருப்பதி ஏழுமலையானின் படத்திற்கு  மலர் சாத்தி சந்தனம் குங்குமம் இடலாம்.  அரிசி, உப்பு, பருப்பு என வீட்டிற்கு தேவையானதை வாங்கி கலசத்தின் முன்பாக வைத்து வழிபட வேண்டும்.

செல்வம்

மகாலட்சுமியை கலசத்தில் எழுந்தருள பிரார்த்தனை செய்து  அட்சதையையும் மலரையும் கலசத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இஷ்டதெய்வம், குல தெய்வத்தை வணங்கி  தூப தீப ஆராதனை செய்யலாம். துதிகள், பாடல்கள், 108 போற்றிகள் ஏதேனும் ஒன்றை சொல்லி அர்ச்சிக்க வேண்டும்.பால் பாயாசம் செய்து நைவேத்தியம் செய்வது சிறப்பு. அதன்பின் கற்பூர ஆரத்தி காட்டி பூஜையை நிறைவு செய்யலாம். வெண்மை , மஞ்சள் நிற மலர்களையும் கொண்டு வழிபாடு செய்வது சிறப்பு. இன்றைய தினம் குழந்தைக்கு அன்னப்பிராசனம், கலைகள், சுபகாரியங்கள் அனைத்தையும் தொடங்கலாம்.  இந்நாளில் எந்த சுபகாரியங்களில் ஈடுபட்டால், இரட்டிப்பு சுபபலன்கள் உண்டாவது உறுதி. 

மகாலட்சுமி  பாற்கடலில் வாசம் செய்பவள். இதனால் வெண்மை நிறப் பொருட்கள் வாங்குதல் கூடுதல் சிறப்பு. உப்பு, பால், அரிசி இவைகளை வாங்கலாம். இந்நாளில் வாங்கும் பொருள்கள் பல்கிப் பெருகும் என்பதால் தங்கம், வெள்ளி, பிளாட்டினம், வைரம் வாங்க சிறந்த நாளாக கருதப்படுகிறது. இன்று அட்சய திருதியை என்பதால் இன்றைய நாள் முழுவதுமே தங்கம் வாங்குவதற்கு சிறப்பான நாள் என்ற போதிலும், குறிப்பிட்ட சில நேரங்களில் தங்கம் வாங்குவது கூடுதல் சிறப்பு. 

இன்று வெள்ளிக்கிழமை என்பதால், எந்த ஹோரையில் தங்கம் வாங்கலாம் என்று பார்க்கலாம் வாங்க. இன்று சனி ஹோரை , குருஹோரை, சுக்கிர ஹோரைகளில்  தங்கம் வாங்கினால், தங்கம் நம்முடன் நிரந்தரமாக தங்கும்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி! 

From around the web