’பிச்சை எடுத்த பணம் சார்’.. போதையில் தள்ளாடிய பெண்ணிடம் இருந்து ரூ1 லட்சத்து 50 ஆயிரம் பறிமுதல்!

 
மணிமேகலை

திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நல்லூர் தேவாலயம் அருகே நேற்று மாலை, 36 வயது பெண் ஒருவர் குடிபோதையில் தள்ளாடி,  கட்டு கட்டாண பணத்துடன் சேலையில் சுற்றி வைத்து நடமாடியுள்ளார். அதே சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அருகிலிருந்த கடைக்காரர்கள், குடிபோதையில் தள்ளாடிய பெண்ணிடம் ஏராளமான பணம் இருப்பதாக போலீஸாரிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். பின்னர் அந்த பெண்ணை சோதனையிட்டபோது உரிய ஆவணங்கள் இல்லாமல் 1 லட்சத்து 50 ஆயிரம் பணம் வைத்திருந்தது தெரியவந்தது. உடனே போலீசார் அதை கைப்பற்றி மாநகராட்சி கமிஷனரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் அந்த பெண்ணிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் திருமானூர் திருமானூர் பகுதியை சேர்ந்த ராஜா என்பவரின் மனைவி மணிமேகலை (36) என்பது தெரியவந்தது. இது 5 நாட்களுக்கு முன்பு பண்ணாரி அம்மன் கோயிலின் வாசலில் அமர்ந்து யாசகம் (பிச்சை எடுத்து) செய்து பெற்ற பணம் என்று மணிமேகலை போலீஸாரிடம் தெரிவித்தார். இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட பணம் கருவூலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அந்த பெண்ணை ஆலங்காட்டில் உள்ள காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.


 லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web