வந்தே பாரத் ரயில் உணவில் வண்டு... ரூ50, 000 அபராதம்!

 
வந்தே பாரத்

  தமிழகத்தில் நெல்லை , சென்னை இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில்  பயணிகளுக்கு வழங்கப்பட்ட உணவில் வண்டு கிடந்ததாக புகார் எழுந்துள்ளது. உணவில் வண்டு கிடந்ததை பார்த்து பயணி அதிர்ச்சி அடைந்து  அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் புகார் கூறியிருந்தார்.

வந்தே பாரத்

இச்சம்பவம்  குறித்து  உணவு கொடுக்கும் ஊழியர்களை வரவழைத்து விசாரித்து புகார் செய்ததாகவும், இது சாம்பாரில் போடும் சீரகம் என ஊழியர்கள் மறுப்பு தெரிவித்ததாகவும் கூறியுள்ளனர்.  இதனைத் தொடர்ந்து சக பயணிகள் அதை வண்டு என உறுதிப்படுத்தியதை தொடர்ந்து மன்னிப்பு கேட்டு சென்றதாகவும் கூறியுள்ளார்.  
இந்நிலையில் இச்சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்ட தெற்கு ரயில்வே, நெல்லை- சென்னை வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் வண்டுகள் இருந்த விவகாரத்தை தொடர்ந்து உணவு விநியோகம் செய்த புராடக்ட்ஸ் நிறுவனத்துக்கு ரூ.50,000 அபராதம் விதித்துள்ளது. 

 வந்தே பாரத் ரயில்


இச்சம்பவம் குறித்து  விசாரணை நடத்தி மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே கூறியுள்ளது. பயணிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை உறுதி செய்வதில் ரயில்வே உறுதியாக உள்ளது  உணவு தரத்தை கண்காணிக்க ரயில்களில் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விளக்கம் அளித்துள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web