இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.20 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்.. 9 பேர் அதிரடியாக கைது!

 
ஜெயக்குமார்

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணியை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது கிடங்கு குளத்தூர் அருகே தளவாய்புரம் கிராமத்தில் உள்ளது. அங்கு முறைகேடாக யூரியா மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் வேளாண் துறை ஓட்டப்பிடாரம் வட்டார உர ஆய்வாளர் சிவகாமி, குளத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) உமாதேவி மற்றும் போலீஸார் நேற்று முன்தினம் இரவு ஜெயக்குமாரின் கிடங்குக்குச் சென்று ஆய்வு செய்தனர்.

பீடி இலைகள்

அங்கிருந்த சிலர் அரசு மானிய முத்திரையுடன் மஞ்சள் சாக்கு மூட்டைகளில் யூரியாவை பிரித்து வேறு சாக்குகளுக்கு மாற்றி லாரியில் ஏற்றி தனியார் உரக்கடைகளுக்கு எடுத்துச் சென்று கொண்டிருந்தனர். மேலும், அந்த கிடங்கில் பீடி இலை மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. விசாரணையில், பீடி இலைகள் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

மேலும், மதுரை பகுதியில் விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்படும் யூரியா மூட்டைகள் வாங்கி, அதை வேறு மூடைகளாக மாற்றி, தனியார் உரக்கடைகளுக்கு எடுத்துச் சென்று அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து, கிடங்கில் இருந்த 299 யூரியா மூட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 5 லட்சம். இதேபோல், தலா 60 கிலோ எடையுள்ள 40 பீடி இலைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ. 20 லட்சம்.

இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீஸார், திண்டுக்கல் மாவட்டம், நகர் நகரைச் சேர்ந்த கார்த்திக் (39), திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியைச் சேர்ந்த சையத்தலி (35), புதுக்கோட்டை மாவட்டம், திருக்கோகர்ணம் பகுதியைச் சேர்ந்த அசன்பாஷா (50), ராஜேஷ்குமார் (50),தூத்துக்குடி ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்த அரவிந்த் (22), சிலுவைப்பட்டியைச் சேர்ந்த முருகேசன் (43), மேலூரைச் சேர்ந்த அந்தோணி கார்த்திக் (27), கிருஷ்ணராஜபுரத்தைச் சேர்ந்த அப்துல்ரகுமான் (24), கனிராஜ் (42) ஆகிய 9 பேரை கைது செய்தனர். 35),

கைது

மேலும், கிடங்கு உரிமையாளர், லாரி உரிமையாளர்கள் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அவர்களை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 9 பேரும் விளாத்திகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web