புறாவுக்கு போரா?.. செருப்புக்காக நடந்த பயங்கர சண்டை.. பரிதாபமாக பலியான 11ம் வகுப்பு மாணவன்!

 
வரகூர் அரசு மேல்நிலைப்பள்ளி

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே நாவலடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் ஆகாஷ். 16 வயதான ஆகாஷ் வரகூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு கணினி அறிவியல் படித்து வருகிறார். ஆகாஷ் வெள்ளிக்கிழமை வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுள்ளார். இன்று (சனிக்கிழமை) பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ள கல்வி மேலாண்மை இயக்கத்திற்கான ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக பள்ளி தலைமை ஆசிரியர் புஷ்பராஜ் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார்.

தலைமை ஆசிரியரின் அழைப்பின் பேரில், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்தாய்வு கூட்டத்திற்கு சென்றனர். இதில் மாணவர் ஆகாஷும் கலந்து கொண்டார். மீட்டிங் முடிந்து திரும்பிய அவர், வகுப்பறைக்கு வெளியே விட்டுச்சென்ற செருப்பைக் காணவில்லை. செருப்பை எடுத்தது யார் என சக மாணவர்களிடம் சத்தம் போட்டார். அப்போது அவரது நண்பரான மற்றொரு மாணவர் நான்தான் செருப்பை எடுத்து பத்திரமாக வைத்திருந்தேன் என்றார்.

செருப்பை மறைத்து வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த ஆகாஷ், மாணவனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றி இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதில் பலத்த காயம் அடைந்த ஆகாஷ் மயங்கி விழுந்தார். இதை பார்த்த சக மாணவர்கள், ஆசிரியர்களிடம் தெரிவித்தனர்.

காயமடைந்த மாணவர் ஆகாஷை முதலில் அருகில் உள்ள எருமப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஆகாஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆகாஷை தாக்கிய சக மாணவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகம் மற்றும் மாணவர்களிடம் மாவட்ட கல்வி அதிகாரி விசாரணை நடத்தி வருகிறார்.

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web