குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து சீரானதால் குளிக்க அனுமதி...சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!
குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து சீரானதால் சுற்றுலா பயணிகள், அய்யப்ப பக்தர்கள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த தொடர் மழையால் குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் பழைய குற்றாலம் அருவியில் மட்டும் சுற்றுலா பயணிகளை குளிக்க அனுமதித்தனர்.
நேற்று குற்றாலம் சுற்று வட்டார பகுதிகளில் வெயில் அடித்தது. அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து குறைந்து சீராக விழுந்தது. இதனால் அனைத்து அருவிகளிலும் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலா பயணிகள், அய்யப்ப பக்தர்கள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!