இப்பவே திட்டமிட்டுக்கோங்க... மார்ச் மாதத்தில் 4 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது!

இந்தியாவில் செயல்பட்டு வரும் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. வங்கிகள் சங்கம் மற்றும் அனைத்து வங்கி தொழிற்சங்கங்களின் ஐக்கிய மன்றம் சார்பில் நடத்தப்பட்ட உறுப்பினர்கள் உடனான கூட்டத்தொடரில் பணியாளர்கள் குறைப்பு உட்பட பல நிபந்தனைகளை முன் வைத்துள்ளது.
இந்நிலையில் வலியுறுத்தப்பட்ட இந்த கோரிக்கைகளை நிறைவேற்றதால் வங்கிப்பணி ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே வேலை, அனைத்து பணியிடங்களிலும் தகுதியுள்ள பணியாளர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 9 வங்கி ஊழியர்கள் சங்கங்களில் UFBU அமைப்பு முன் வைத்திருந்தது.
இந்த கோரிக்கைகள் குறித்து இந்தியா வங்கிகள் சங்கத்துடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் மார்ச் 24 மற்றும் 25ம் தேதிகளில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதனால் மார்ச் மாதம் 4வது வார சனிக்கிழமை விடுமுறையுடன் ஞாயிறு, திங்கள், செவ்வாய் என தொடர்ந்து 4 நாட்கள் அனைத்து வங்கி சேவைகளும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!