குப்பையில் கிடந்த வங்கி பாஸ்புக்.. 10 ஆண்டுகளுக்கு முன் இறந்த தந்தையால் கோடீஸ்வரரான மகன்!

 
ஹினோஜோசா

சிலி நாட்டைச் சேர்ந்த ஹினோஜோசா என்பவர் தனது வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவரது தந்தைக்கு சொந்தமான 60 ஆண்டுகள் பழமையான வங்கி பாஸ்புக் கிடைத்தது. அந்த வங்கிக் கணக்கு பற்றி ஹினோஜோசாவின் தந்தைக்கு மட்டுமே தெரியும். இவரது தந்தையும் 10 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.

1960 மற்றும் 1970 க்கு இடையில், ஹினோஜோசா தந்தை ஒரு வீட்டை வாங்க வங்கியில் 1.40 லட்சம் பெசோக்களை (சிலி கரன்சி) டெபாசிட் செய்தார். ஆனால் சம்பந்தப்பட்ட வங்கி நீண்ட காலத்திற்கு முன்பே மூடப்பட்டது. பாஸ்புக்கில் அரசு உத்தரவாதம் என்ற வார்த்தையை ஹினோஜோசா கவனித்தார். உடனே அரசை அணுகினார். ஆனால் சரியான பதில் கிடைக்கவில்லை. இதனால், தந்தை சம்பாதித்த பணம் தனக்கு வேண்டும் என்று அரசு மீது வழக்குத் தொடுத்து நீதிமன்றத்தில் வாதிட்டார்.

சிறுமி வன்கொடுமை வழக்கில் ஒரேநாளில் நீதிமன்றம் தீர்ப்பு..!!

அதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், வட்டியுடன் சேர்த்து 1.2 மில்லியன் டாலர்களை (சுமார் ரூ.10 கோடி) திருப்பித் தருமாறு அரசுக்கு உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டது. இந்த வழக்கு தொடர்பாக வேறு எந்த தகவலும் இதுவரை தெரியவில்லை. நிர்வாகத்துக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் அவருக்கு ரூ.10 கோடி கிடைக்கும். இந்த நிகழ்வு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web