இப்பவே ப்ளான் பண்ணுங்க... செப்டம்பர் மாதத்தில் 14 நாட்கள் வங்கி விடுமுறை நாட்கள்!

 
வங்கி விடுமுறை


இந்தியா முழுவதும் ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகள் அதிகரித்து டிஜிட்டல் இந்தியாவாக மாறி வருகிறது. பெட்டிக்கடைகள் தொடங்கி பெரிய பெரிய ஷாப்பிங் மால்கள் வரை எல்லாமே ஜிபே, போன் பே என டிஜிட்டல் மயம் தான்.  கையில் பணம் வைத்து செலவு செய்பவர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவாகவே இருக்கிறது. 10 ரூபாய் முதல் 10,000 வரை என்ன செலவாக இருந்தாலும் அதை ஆன்லைனில் செய்ய பழகிவிட்டோம்.   காசு  வரவு , செலவு  எல்லாமே இணையம் வழியாக இருந்தாலும் ஒரு சில வேலைகளை நேரடியாக வங்கிக்கு சென்று தான் முடிக்க வேண்டிய கட்டாயம் இன்னமும் இருந்து வருகிறது. குறிப்பாக  வங்கிக் கணக்கு தகவல்களில் திருத்தம் செய்வது, டிடி எடுப்பது, செக் போடுவது, புதிய பாஸ்புக் வாங்குவது, போன்ற செயல்களை செய்வதற்கு வங்கிகளுக்கு தான் நேரடியாக செல்ல வேண்டிய சூழல்.  

வங்கி விடுமுறை
இப்படி முக்கிய காரியங்களை செய்வதற்காக வங்கிகளுக்கு செல்லும்பொழுது வங்கி விடுமுறையாக இருந்தால் அந்த நாளே வீணாகிவிடும். மீண்டும் ஒரு நாள் வங்கி செல்வதற்காக விடுப்பு எடுக்க வேண்டிவரும். இதனை தவிர்க்க இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் அரசு மற்றும் தனியார் வங்கிகளின் விடுமுறை பட்டியல் ஒரு மாதம் முன்பாக வெளியிடப்படுகிறது. இத்தகவலை ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது. அந்த வகையில் ஆகஸ்ட் மாதம் முடிவடைய இன்னும் சில நாட்களே உள்ளன. செப்டம்பர் 2024ம் மாதத்துக்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியாகியுள்ளது. இதன் அடிப்படையில் வங்கிப் பணிகளை திட்டமிட்டுக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.  அதன்படி இந்த செப்டம்பர் மாதத்தில் சுமார் 14 நாட்கள் நாடு முழுவதும் உள்ள வங்கிகள் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.  


செப்டம்பர் மாதத்துக்கான வங்கி விடுமுறை பட்டியல் :


செப்டம்பர் 1 - ஞாயிற்றுக்கிழமை
செப்டம்பர் 7 - சனிக்கிழமை - விநாயக சதுர்த்தி  
செப்டம்பர் 8 - ஞாயிற்றுக்கிழமை  
செப்டம்பர் 13 - வெள்ளிக்கிழமை ராம்தேவ் ஜெயந்தி , தேஜா தஷ்மி ராஜஸ்தான்
செப்டம்பர் 14 - 2 வது சனிக்கிழமை
செப்டம்பர் 15- ஞாயிற்றுக்கிழமை 

வங்கி
செப்டம்பர் 16- திங்கட்கிழமை -ஈத் இ மிலாத் விஸ்வகர்மா பூஜை ராஜஸ்தான், ஹரியானா மற்றும் பஞ்சாப்
செப்டம்பர் 17- செவ்வாய் கிழமை இந்திர ஜாத்ரா சிக்கிம்
செப்டம்பர் 18 - புதன்கிழமை ஸ்ரீநாராயண குரு ஜெயந்தி, கேரளா
செப்டம்பர் 21- சனிக்கிழமை ஸ்ரீ நாராயண குரு சமாதி, கேரளா
செப்டம்பர் 22 - ஞாயிற்றுக்கிழமை 
செப்டம்பர் 23 - திங்கட்கிழமை -ஹரியானா மாவீரர் தியாக தினம் ஹரியானா
செப்டம்பர் 28 -4 வது சனிக்கிழமை
செப்டம்பர் 29 -ஞாயிற்றுக்கிழமை  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

 பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

From around the web