வங்கி வாடிக்கையாளர்களே உஷார்... இந்த 2 நாட்களில் எச்டிஎஃப்சி வங்கி யுபிஐ சேவைகளுக்கு தடை!

 
எச்.டி.எஃப்.சி வங்கி

இந்த 2 நாட்களில் யுபிஐ சேவை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. எச்டிஎஃப்சி வாடிக்கையாளர்களே உங்களுக்கான முக்கிய அறிவிப்பு ஒன்றை வங்கி நிர்வாகம்  வெளியிட்டுள்ளது.டிஜிட்டல் வங்கி சேவையின் தரம் மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்தும் வகையில் பராமரிப்பு பணிகளுக்கு திட்டமிடப்பட்டு இருப்பதால், இந்த மாதத்தில் 2 நாட்கள் வங்கியின் யுபிஐ  சேவைகளில் சிறிது நேரம் தடை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எச்டிஎப்சி


இது குறித்து எச்டிஎப்சி வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பில் “நள்ளிரவு 12 மணியிலிருந்து 2 மணிவரை  யுபிஐ சேவையில் தடை ஏற்படும். அதே போல் நவம்பர் 22ம் தேதி நள்ளிரவு 12 மணியிலிருந்து 3 மணி வரை தொடர்ந்து 3 மணிநேரம் சேவை பாதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எச்டிஎஃப்சி வங்கியின் நடப்பு மற்றும் சேமிப்பு கணக்குகள்,  ரூபே கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கான யுபிஐ பரிவர்த்தனை செயல்படாது.  

எச்டிஎப்சி

மேலும், எச்டிஎஃப்சி வங்கி கணக்கு லிங்க் செய்யப்பட்டுள்ள ஜிபே, வாட்ஸ்அப் பே, பேடிஎம், ஸ்ரீராம் ஃபைனான்ஸ், மொபிக்விக் மற்றும் கிரெடிட்.பே ஆகியவையும் குறிப்பிட்ட நாள்களில் செயல்படாது. இந்த பராமரிப்புப் பணியில் எச்டிஎஃப்சி வங்கியின் பிற இணையதள சேவைகளும் முடங்க வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web