இன்று முதல் சதுரகிரி கோவிலுக்கு செல்ல தடை!

 
இன்று முதல் சதுரகிரி கோவிலுக்கு செல்ல தடை!


தமிழகத்தில் கொரோனா 2வது அலை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 3வது அலை அச்சம் காரணமாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்த பட்டு வருகின்றன. தளர்வுகள் அளிக்கப்பட்டு இருந்த போதிலும் பாதிப்புக்களின் அடிப்படையில் கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ள மாவட்ட அளவில் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் சதுரகிரி கோவிலுக்கு செல்ல தடை!


அந்த வகையில் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில். உலக பிரசித்தி பெற்ற இந்தக் கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அமாவாசை, பிரதோ‌ஷம், சிவராத்திரி தினங்களில் பக்தர்கள் ஒன்று கூடி வழிபாடு நடத்துவது வழக்கமாக இருந்து வருகிறது.

இன்று முதல் சதுரகிரி கோவிலுக்கு செல்ல தடை!


கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக சதுரகிரி மலைக் கோயிலுக்கு செல்ல தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வருகிறது. இன்று சனி பிரதோ‌ஷம், திங்கட் கிழமை பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் ஒன்று கூடுவதை தடுக்கும் வகையில் இன்று முதல் செப்டம்பர் 21வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மாவட்ட கலெக்டர் பிறப்பித்துள்ளார்.

கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்படுவதாகவும், கோவில் பூஜைகள் பூசாரிகள் மூலம் வழக்கம் போல் நடைபெறும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள தாணிப்பாறை மலை அடிவாரத்திலிருந்தே தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

From around the web