சுற்றுலா வாகனங்களில் பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்ல தடை... கலெக்டருக்கு கோரிக்கை!
தூத்துக்குடி மாவட்டத்தில் மோட்டார் வாகன சட்ட விதிகளுக்கு எதிராக இயங்கி வரும் வாகனங்களை பறிமுதல் செய்து வாகன அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இந்து மக்கள் கட்சி மாவட்ட அமைப்பாளர் சுடலைமணி என்பவர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனு: தூத்துக்குடி பகுதியில் அதிகப்படியான சுற்றுலா வாகனங்கள் சுற்றுலா அனுமதி பெற்று இயங்கி வருகிறது.
அதில் மோட்டார் வாகன சட்ட விதிகளுக்கு எதிராக மேக்ஸி, கேப், வேன் வகையை சார்ந்த சுற்றுலா பெர்மிட் அனுமதியை பெற்றுக் கொண்டு சட்ட விரோதமாக பள்ளி குழந்தைகளை அதிகமாக ஏற்றியும், பள்ளி அனுமதி வாகனத்திற்கு முறையாக அனுமதி பெறாமலும், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களை ஏற்றியும் பணியாளர் வாகனத்திற்கு முறையாக அனுமதி பெறாமல் பயன்படுத்துகின்றனர்.
அது போல மேக்ஸி கேப் வேன் நிறுவனங்களில் தயாரித்து வரும் உருவமைப்பை மாற்றி தாங்களாகவே கோச் பாடி கட்டுகின்றனர். கோச் பாடி கட்டுவதற்கு முறையாக அனுமதி பெறாமலும், வெள்ளை நிற பதிவெண் கொண்ட வாகனங்களை சுற்றுலா செல்வதற்கு வாடகைக்கு விட்டும் பள்ளி குழந்தைகளையும் ஏற்றியும் சட்ட விரோதமாக செயல்படுகின்றனர். அப்படி இயங்குகின்ற வாகனங்களில் வரி, பெர்மிட், எஃப் சி, இன்சுரன்ஸ், லைசென்ஸ் போன்றவை இல்லை.
ஆகவே, மாவட்ட ஆட்சியர் தலையீட்டு, இந்த விசயத்தில் ஒரு குழு அமைத்து முறையாக ஆய்வு செய்து, சுற்றுலா அனுமதி பெற்று இயங்கும் மேக்ஸி கேப், வேன் மற்றும் சொந்த உபயோகத்திற்கான வாகனங்களை முறையாக ஆய்வு செய்தும், மோட்டார் வாகன சட்ட விதிகளுக்கு எதிராக இயங்கி வரும் வாகனங்களை பறிமுதல் செய்து வாகன அனுமதியினை ரத்து செய்யுமாறும். பள்ளி குழந்தைகள், பணியாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் உயிரினை காக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!