இந்திய விவசாயிகள் உரக்கூட்டுறவு நிறுவன தலைவர் மரணம்! மோடி, அமித்ஷா இரங்கல்!!

 
இந்திய விவசாயிகள் உரக்கூட்டுறவு நிறுவன தலைவர் மரணம்! மோடி, அமித்ஷா இரங்கல்!!

இந்திய விவசாயிகள் உரக்கூட்டுறவு நிறுவன (இஃப்கோ) தலைவர் சர்தார் பல்வீந்தர் சிங் நக்காய் நேற்று தனது 87வது வயதில் காலமானார்.

இந்திய விவசாயிகள் உரக்கூட்டுறவு நிறுவன தலைவர் மரணம்! மோடி, அமித்ஷா இரங்கல்!!

பல்வீந்தர் சிங் நக்காய் 1934ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி பிறந்தவர். அடிப்படையில் இளம் வயதிலேயே சிறந்த விவசாயியாக திகழ்ந்த பல்வீந்தர் சிங், பல விவசாயிகளுக்கு உறுதுணையாகவும் திகழ்ந்தவர். இந்திய விவசாயிகள் கூட்டுறவு சங்கம் திறம்பட செயல்பட கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்தவர்.

“வேளாண்மை மற்றும் கூட்டுறவுத்துறையில் சிறந்து விளங்கியவர் சர்தார் பல்வீந்தர் சிங் நக்காய் அவர்கள். விவசாயிகளுக்கு அதிகாரம் அளிப்பதை நோக்கிய பங்களிப்புகளில் முன்னோடியாக இருந்தவர் அவர். அவரது மறைவு வருத்தமளிக்கிறது, அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள், அவரது ஆன்மா சாந்தியடைவதாக” என்று பிரதமர் மோடி, பல்வீந்தர் சிங் மரணம் குறித்து ட்விட்டர் இரங்கல் செய்தி விடுத்துள்ளார். அமித்ஷாவும் பல்வீந்தர் சிங் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

From around the web