பகீர் பிண்ணனி... அம்மா அப்பா என்ன மன்னிச்சிடுங்க... ராணுவ வேலைக்கு தேர்வான இளைஞர் வீடியோ வெளியிட்டு தற்கொலை!

 
பகீர் பிண்ணனி... அம்மா அப்பா என்ன மன்னிச்சிடுங்க... ராணுவ வேலைக்கு தேர்வான இளைஞர் வீடியோ வெளியிட்டு தற்கொலை! 

 
மத்தியப்பிரதேச மாநிலத்தில் கட்டணி மாவட்டத்தில் வசித்து வருபவர் ரவீந்தர் சிங். இவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ரவீந்தர் சிங் இந்திய ராணுவத்தில் வேலை பார்க்க தேர்வு செய்யப்பட்டார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அம்மா அப்பா மன்னித்து விடுங்கள் நான் ராணுவத்தில் சேரும் வாய்ப்பு பெற்று இருந்தாலும் இதை பொறுத்துக் கொண்டு வாழ முடியவில்லை எனக் கூறியுள்ளார்.

நான் சுஜித் புஷ்வாகா மற்றும் இன்னொருவரிடம் இருந்து 22,000 பணம் வாங்கினேன். அவர்கள் தற்போது 1.5 லட்சம் பணம் தர வேண்டும் எனக் கூறுகின்றனர். எனது பெற்றோரும் ரூ40000 தர வேண்டும் என மிரட்டுகின்றனர். அதனை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மன அழுத்தம் அதிகமாக இருப்பதால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறியுள்ளார். அந்த வீடியோவை பெற்றோருக்கு அனுப்பி விட்டு ரவீந்தர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் ஒரு மலைப்பகுதியில் மயங்கி கிடந்த ரவீந்திரனை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

 

ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ரவீந்தர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ரவீந்தரின் செல்போனை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

 

 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web