தெறி பேபி.... ’ பேபி ஜான்’ டீசர் வெளியீடு... ரசிகர்கள் உற்சாகம்!
பேபி ஜான் திரைப்படம் இயக்குநர் அட்லீ ஏ ஃபார் ஆப்பிள் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் இந்தியில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. தற்போது இந்தியில் வருண் தவானின் 18வது படமான ‘பேபி ஜான்’ என்ற படத்தின் மூலம தயாரிப்பாளராக பாலிவுட்டில் அறிமுகமாகிறார் அட்லீ . இவருடன் ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் சினி 1 ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்களும் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்கள்.
இப்படத்தின் இயக்குநர் காளீஸ். இத்திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் வாமிகா கபி நடித்து வருகின்றனர். மேலும் ஜாக்கி ஷெராப், ராஜ்பால் யாதவ், மணிகண்டன், பி. எஸ். அவினாஷ் உட்பட பலர் நடிக்கிறார்கள். தமன் இசையமைக்கும் இப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 25ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆக்சன் ஜானரில் உருவாகும் இப்படம் தெறி படத்தின் இந்தி ரீமேக் என கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் டீசர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் தெறி படத்தின் சாயல் இருப்பதாக கூறப்படுகிறது.
இருப்பினும் இந்திக்காக சில மாற்றங்கள் செய்துள்ளனர். டீசரில் கீர்த்தி சுரேஷ் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு புது லுக்கில் காட்சியளிக்கிறார். சமந்தா கதாபாத்திரத்தில் கீர்த்தி நடித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் ரிவால்வர் ரீட்டா, கண்ணி வெடி படங்களில் நடித்து வருகிறார். அவர் பேபி ஜான் படம் மூலம் இந்தியில் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!