ஆயுதபூஜை.. தொடர் விடுமுறை... முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் அறிவிப்பு!

தமிழகத்தில் பண்டிகை காலங்கள், தொடர் விடுமுறை தினங்களில் பலரும் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு கிளம்பிச் செல்வது வாடிக்கையாக இருந்து வருகிறது.
இந்நிலையில், நாளை வெள்ளிக்கிழமை ஆயுதபூஜையை முன்னிட்டு தொடர் விடுமுறை தினங்களாக வரவிருப்பதால் பலரும் இன்று முதலே சொந்த ஊர் நோக்கி பயணப்பட்டு வருகிறார்கள்.
பொதுமக்களின் வசதிக்காக இன்று முழுவதும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று அக்டோபர் 10ம் தேதி இரவு 12: 15 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து மயிலாடுதுறை, திருவாரூர் பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி செல்லும் சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் முற்றிலும் முன்பதிவு இல்லாத 12 பெட்டிகளைக் கொண்ட ரயிலாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தாம்பரத்தில் இன்று இரவு புறப்படும் இந்த ரயில் நாளை காலை 5.20 மணிக்கு மயிலாடுதுறையிலும், காலை 6 மணிக்கு திருவாரூரிலும், 6.30 மணிக்கு நீடாமங்கலத்திலும், 6.58க்கு தஞ்சாவூரில் நிற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூரில் காலை 6 மணிக்கு இறங்கி காலை 6:20 மணிக்கு காரைக்குடி புறப்பட்டு செல்லும் ரயிலில் திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை அறந்தாங்கி பேராவூரணி காரைக்குடி வரை செல்லும் ரயிலில் பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று மறுமார்க்கமாக நாளை அக்டோபர் 11ம் தேதி தஞ்சாவூரில் இருந்து இரவு 11.55 புறப்பட்டு திருவாரூர், மயிலாடுதுறை வழியாக தாம்பரம் ரயில் நிலையத்தை அடுத்த நாள் அக்டோபர் 12ம் தேதி காலை 6.25 மணிக்கு வந்தடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!