புத்தம் புதிய இனிப்புக்களுடன் பட்டைய கிளப்ப தயாராகும் ஆவின்!

புத்தம் புதிய இனிப்புக்களுடன் பட்டைய கிளப்ப தயாராகும் ஆவின்!

இந்தியா முழுவதும் டிசம்பர் 4ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு அரசு பால் நிறுவனமான ஆவின் நிறுவனம் புதிய இனிப்பு வகைகளை அறிமுகப்படுத்த இருப்பதாக பால்வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.இது குறித்து பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

புத்தம் புதிய இனிப்புக்களுடன் பட்டைய கிளப்ப தயாராகும் ஆவின்!

அதில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதிய வகை இனிப்புக்களை ஆவின் நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது. அதன்படி
1) காஜூ கட்லீ (250 கி) -ரூ.225.00
2) நட்டி மில்க் கேக் (250 கி) -ரூ.210.00
3) மோத்தி பாக் (250 கி) -ரூ.170.00,
4) காஜு பிஸ்தா ரோல்(250 கி)-ரூ.275.00
5) காபி மில்க் பர்பி (250 கி) -ரூ.210.00

புத்தம் புதிய இனிப்புக்களுடன் பட்டைய கிளப்ப தயாராகும் ஆவின்!

இந்த 5 வகையான இனிப்புகள் அடங்கிய தொகுப்பு ரூ.425.00 . இந்த விற்பனையை தொடக்கி வைப்பதில் மிக்க மகிழ்ச்சி. ஆவின் நிறுவனத்தை தொழில் முறை நிறுவனம் என்றபோதும் வியாபார நோக்கமில்லை. பொது மக்களுக்கு சேவை செய்கின்ற உணர்வோடு தான் செயல்படுத்தி வருகிறோம்.

2020ல் தீபாவளிக்கு வெளியிடப்பட்ட இனிப்பு வகைகளில் 15 டன் விற்பனை செய்து 1.2 கோடி லாபம் ஈட்டப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் 2.2 கோடி லாபம் அடைய 25 டன் என்ற இலக்குடன் களம் இறங்கியுள்ளோம்.

புத்தம் புதிய இனிப்புக்களுடன் பட்டைய கிளப்ப தயாராகும் ஆவின்!

ஆவின் மூலமாக அதிக நுகர்வோர்களை சென்றடைய வேண்டும் என்பதே நோக்கம். கடந்த ஆண்டை விட 50 சதவீதம் கூடுதல் விற்பனை செய்ய வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளோம். மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளார். .

From around the web