வைரல் வீடியோ... பள்ளி மாணவனை அரை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து சென்ற சக மாணவர்கள்... !

 
அரை நிர்வாணம்

பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சமீபகாலமாக மிக அதிகமாக  வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.  இவை பெரும் கவலையை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் பதிவிட்டுள்ளனர். கர்நாடக மாநிலத்தில்   கலபுரகி நகரில் பள்ளி மாணவர் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது.  இந்த விடுதியில், குடியரசு தினத்தில் ஜனவரி 26ம் தேதி  அம்பேத்கர் உருவப்படத்தை வைத்து மரியாதை செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஒரு மாணவர் கலந்து கொள்ளவில்லை எனத் தெரிகிறது.  



இதனால் கோபமடைந்த சக மாணவர்கள், அந்த மாணவரைத் தாக்கி, அரை நிர்வாணமாக்கியுள்ளனர்.அத்துடன் விட்டுவிடாமல்   அவரின் கையில் அம்பேத்கர் உருவப் படத்தைக் கொடுத்து, ஊர்வலமாக செல்ல வேண்டும் எனக் கூறி அவரை அழைத்துச் சென்றனர்.

அரை நிர்வாணம்

இச்சம்பவத்திற்கு கடும் கண்டனங்கள் பதிவிடப்பட்டு வருகின்றன.  மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவரின் உறவினர்கள்  வலியுறுத்தியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த  போலீசார், மாணவனை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web