ஆட்டோ ஓட்டுனர் மனைவியை அபகரித்த விவகாரம்.. தலைமைக் காவலரை சஸ்பெண்ட் செய்து அதிரடி!
மதுரையில் மனைவியை அபகரித்து சென்றதாக ஆட்டோ ஓட்டுநர் புகாரின் பேரில் தனிப்படை தலைமைக் காவலரை சஸ்பெண்ட் செய்து காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். சிவகங்கையை சேர்ந்தவர் தயாளன் (38). ஆட்டோ டிரைவரான இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரை புதூர் பகுதியில் குடியேறினார். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன், போலீஸ் கமிஷனர் லோகநாதனிடம், தயாளன் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அதில், "மதுரை தல்லாகுளம் காவல்நிலையத்தில் பணிபுரியும் தலைமைக் காவலர் செல்வராஜ் என்பவர் எனது மனைவியை அபகரிக்கும் நோக்கில் என்னிடம் இருந்து பிரித்தார். மனைவியுடன் இருக்கும் தொடர்பை நிறுத்துமாறு பல நபர்களைக் கொண்டு மிரட்டினார். மேலும் எனது மகன்களை பார்க்க விடாமல் தடுத்தார்.
இதுகுறித்து விசாரிக்க தல்லாகுளம் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டருக்கு காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவிட்டார். இதையடுத்து மகளிர் போலீசார், ஆட்டோ டிரைவர் தயாளன் தரப்பில் விசாரணை நடத்தினர். இந்நிலையில், மகளிர் போலீஸாரின் விசாரணையின் அடிப்படையில் தலைமைக் காவலர் செல்வராஜை சஸ்பெண்ட் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் இன்று பிறப்பித்தார்.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!