உலகக்கோப்பை பைனல்சில் இந்தியாவுடன், ஆஸ்திரேலியா... ரசிகர்கள் உற்சாகம்... !!
13 வது உலகக் கோப்பை போட்டிகள் இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைபெற்று வருகின்றன. லீக் போட்டிகள் நிறைவடைந்து தற்போது அரையிறுதி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இறுதிப்போட்டிக்கு ஏற்கனவே இந்தியா தகுதி பெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று நவம்பர் 16ம் தேதி வியாழக்கிழமை கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் நடைபெற்ற உலகக் கோப்பையின் 2வது அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும், தென் ஆப்பிரிக்காவும் மோதின. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்கம் முதலே மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் ஆகிய ஆஸ்திரேலிய வீரர்கள் திணறவைத்தனர். இந்த ஆரம்ப அடியில் இருந்து தென் ஆப்பிரிக்க அணியால் மீள முடியவில்லை. அதைத் தொடர்ந்து டேவிட் மில்லர் சதம் அடித்தாலும் அவர்களால் 212 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
தென் ஆப்பிரிக்க அணியின் நான்கு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வெறும் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். டேவிட் மில்லர் களமிறங்கினாலும், 100 ரன்களைக் கூட கடக்க முடியவில்லை. ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்ய வந்தபோது, டேவிட் வார்னரும், டிராவிஸ் ஹெட்டும் ரன் குவிக்கத் தொடங்கினர். ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்ய வந்தபோது, டேவிட் வார்னரும், டிராவிஸ் ஹெட்டும் ரன் குவிக்கத் தொடங்கினர். இவர்களையடுத்து அடுத்தடுத்து 7 விக்கெட்டுகள் வீழ்ந்தன. சுழற்பந்து வீச்சாளர்கள் எளிதில் ரன்களை எடுக்க விடவில்லை. ஒவ்வொரு ரன்னையும் போராடி தான் ஆஸ்திரேலிய அணி பெற்றாக வேண்டிய நிலை. முதல் போட்டியில் இந்தியாவிடம் தோற்று, இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்கா 134 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த ஆஸ்திரேலியா ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாமல் தொடர்ந்து 8 வெற்றிகளுடன் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருக்கிறது. இந்த வெற்றிக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் கூறுகையில், “டக் அவுட்டில் அமர்ந்திருப்பது எளிதாக இருந்தது. ஆனால் அடுத்த சில மணி நேரம் மிகவும் கவலையாக இருந்தது. இது மிகவும் வலுவான முயற்சியுடன் கூடிய சிறந்த போட்டியாக இருந்தது. ஆடுகளம் சுழல் பந்துகளுக்குச் சாதகமாக இருக்கும் என்று நினைத்தோம். டிராவிஸ் ஹெட் விக்கெட்டுகளை வீழ்த்தும் திறன் கொண்டவர். போட்டி முழுவதும் வெவ்வேறு பந்து வீச்சாளர்கள் பங்களித்துள்ளனர்," எனக் கூறினார். மேலும் இந்தியாவுக்கு எதிரான இறுதிப் போட்டிக்காக ஆவலுடன் காத்திருப்பதாகவும் கம்மின்ஸ் கூறியுள்ளார்.
60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்
ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்
தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்
சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!
கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!!