மகன் முறை இளைஞரைக் காதலித்து திருமணம் செய்த சித்தி... விசாரணையில் அடுத்தடுத்து 19 இளைஞர்களை ஏமாற்றிய கொடூரம்!
மகன் முறை உறவுள்ள இளைஞரைக் காதலித்து வந்த நிலையில், இருவரும் வீட்டை விட்டு வெளியேறி ஓடியது உறவினர்களிடையே பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பாலாஜி நகரைச் சேர்ந்தவர் முனியம்மா. கணவரைப் பிரிந்து, தனது 24 வயது மகள் தேவியுடன் வாழ்ந்து வருகிறார். அந்த பகுதியில் வீட்டு வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார். இவரது மகள் தேவி, நர்ஸிங் படிப்பை முடித்து விட்டு, வீடுகளில் நோய்வாய்ப்பட்டுள்ள நோயாளிகளுக்கு அவர்களின் வீட்டிலேயே தங்கியிருந்து மருத்துவம் பார்த்து வரும் பணியை செய்து வந்தார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டிலிருந்து தேவி திடீரென்று மாயமானார். தனது மகள் காணாமல் போனது குறித்து தாய் முனியம்மாள் செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அதே பகுதியில் சாய்ராம் என்ற 19 வயது இளைஞனும் காணாமல் போனது குறித்து செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் இருவரும் உறவினர்கள் என தெரிய வந்ததால் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதில் இரு தரப்பினரும் வழக்கறிஞர்கள் மூலம் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட நிலையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் 19 வயது இளைஞரான சாய்ராமுக்கும் அதே பகுதியை சேர்ந்த 24 வயதான தேவிக்கும் சித்தி முறை வருவதாகவும் இருவரும் கடந்த மூன்று மாதங்களாக காதலித்து வந்துள்ளதும் தெரிய வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை பெசன்ட் நகரில் உள்ள முருகன் கோவில் இருவருக்கும் திருமணம் நடைபெற்ற நிலையில் வழக்கறிஞர்கள் மூலம் அழைத்து காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
போலீசாரின் தீவிர விசாரணையில் நர்ஸ் தேவி அடுத்தடுத்து இப்படி சுமார் 12 இளைஞர்களை காதலித்து ஏமாற்றி அவர்களிடமிருந்து பணம் பறித்தது தெரிய வந்தது.
ஒரு கட்டத்தில் தேவி தனது தாயாருடன் செல்ல சம்மதித்த நிலையில், இவை எல்லாம் தெரிந்தும் கூட மகன் உறவுமுறையான மனமுடைந்த 19 வயது காதலன் சினிமா படங்களில் வருவது போல் தன் தாயின் தோளில் சாய்ந்து கொண்டு தேம்பி அழுது காவல் நிலையத்தின் வாசலில் நின்று கொண்டு காவல் நிலையத்தின் உள் இருந்த காதலியை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.
இருவரது தரப்பிலும் சமசராச பேச்சுவார்த்தை ஏற்படுத்தி அவர் அவரது பெற்றோர் வீட்டிற்கு காவல் துறையினர் அனுப்பிவைப்பதற்க்குள் படாத பாடுபட்டனர். திருமணம் என்ற பெயரில் இந்தப் பெண் கட்டியிருந்த தாலியை உறவினர்களுக்கு மத்தியில் மகனின் உறவினரிடம் அந்த பெண் கழட்டி கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!