பட பாணியில் மியூசியத்தில் கொள்ளை முயற்சி.. தப்பிக்க முடியாமல் மயங்கி விழுந்த திருடன்!

 
அரசு அருங்காட்சியகம்

மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரில் அரசு அருங்காட்சியகம் உள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் நவாப் மற்றும் ஆங்கிலேயர் காலத்து தங்க நகைகள் மற்றும் தங்க நாணயங்கள் உள்ளன. இந்நிலையில், இரவோடு இரவாக அருங்காட்சியகம் மூடப்பட்டிருந்த நிலையில், மறுநாள் காலை ஊழியர்கள் வந்து திறந்து பார்த்தபோது, ​​அதிர்ச்சியடைந்தனர். அப்போது அருங்காட்சியக வளாகத்தில் ஒருவர் சுயநினைவின்றி கிடந்தார்.

அவருக்குப் பக்கத்தில் ஒரு பெரிய பை இருந்தது. அதைத் திறந்தபோது நகைகளும் நாணயங்களும் இருந்தன. அவற்றின் மதிப்பு ரூ.15 கோடி இருக்கும்.பின்னர் மயங்கிய நிலையில் இருந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் விரைந்து வந்த போலீசார், அவர் பெயர் வினோத் யாதவ் என்று தெரிவித்தனர். திருடி தப்பிக்க முயன்றபோது 23 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து மயங்கி விழுந்தார்.

தூம் படபாணியில் இந்த கொள்ளையை நடத்த முயன்றார். இந்த அருங்காட்சியகத்தில் மொத்தம் 50 இடங்களில் அவரது கைரேகைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 50 கோடி மதிப்புள்ள தங்க ஆபரணங்கள் உள்ளன.இதில் 15 கோடி மதிப்பிலான நகைகளை சேகரித்துள்ளார். இதுபற்றி அவரிடம் விசாரித்தபோது, ​​தப்பியோட முயன்றபோது காவலாளி ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தால் திட்டத்தை கைவிட்டுவிட்டதாக கூறினார். எனது குழந்தைகளின் எதிர்காலம் மற்றும் கல்விச் செலவுக்காக திருடினேன் என்றார். வினோத் உள்ளே இருக்கும் போது யாரோ வெளியே இருந்திருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web