சர்ச்சை வீடியோ... ஜெய் ஸ்ரீராம் கோஷத்துடன் இஸ்லாமியர் மீது கலர்ப்பொடி தூவி , தண்ணீரை கொட்டி ஆர்ப்பாட்டம்.!
இந்தியா முழுவதும் ஹோலி பண்டிகை மார்ச்25ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சில இடங்களில் வாகனங்களில் கடந்து செல்பவர்களை எரிச்சல்படுத்தி தங்களுடைய பண்டிகையை கொண்டாடினர். நமது கொண்டாட்டம் எதிர்ப்படுபவர்களை உதாசீனப்படுத்துவதாகவோ, காயப்படுத்துவதாகவோ இருக்கக்கூடாது என்பதை யாரும் உணரவில்லை என்றே தெரிகிறது. பண்டிகைகள் கொண்டாடுவதன் நோக்கமே நம் மகிழ்ச்சியை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே.
Muslim family being harassed during Hindu Festival of Holi pic.twitter.com/u2Grdaih00
— Crime Reports India (@AsianDigest) March 23, 2024
உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னூரில் ஒரு முஸ்லீம் குடும்பத்தின் மீது வண்ணம் பூசி அவர்களை ஹோலி என்ற பெயரில் அவமானப்படுத்தியுள்ளனர் மர்மநபர்கள். இது குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஒரு முஸ்லீம் குடும்பத்தின் மீது சிலர் வலுக்கட்டாயமாக வண்ணங்களைப் பூசுகின்றனர்.
அத்துடன் அவர்கள் மேல் தண்ணீரை பீய்ச்சி அடிக்கின்றனர். மேலும் ஆண்கள் "ஜெய் ஸ்ரீ ராம்" என்ற கோஷங்களை எழுப்புவதையும் நம்மால் காண முடிகிறது. இச்சம்பவம் மார்ச் 20ம் தேதி புதன்கிழமை அன்று பிஜ்னூர் நகரின் தாம்பூர் பகுதியில் நடந்துள்ளது. அப்பகுதியின் வட்ட அதிகாரி(CO) பாதிக்கப்பட்ட குடும்பத்திடம் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர். வீடியோவில் உள்ளவர்களை தேடி அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!