அணுகுண்டு தந்தை அப்துல் காதிர்கான் உயிரிழப்பு!

 
அணுகுண்டு தந்தை அப்துல் காதிர்கான் உயிரிழப்பு!


இந்தியாவை எப்போதும் போட்டியாக நினைத்து வரும் நாடுகளில் மிக முக்கியமானது பாகிஸ்தான். இந்தியா அணுகுண்டு கண்டுபிடித்ததைத் தொடர்ந்து போட்டியாக பாகிஸ்தானில் அப்துல் காதிர்கான் அணுகுண்டை உருவாக்கினார். அணுவிஞ்ஞானியான இவர் பாகிஸ்தானில் அணுகுண்டு தந்தை எனப் போற்றப்படுகிறார்.


85 வயதான அப்துல் சில காலமாகவே உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அத்துடன் அவருக்கு கொரோனா தொற்றும் சேர்ந்து கொண்டது இதனால் உடல்நிலை மிகவும் மோசமானது. இஸ்லாமாபாத்தில் உள்ள கே.ஆர்.எல். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் குழு கண்காணித்து வந்தது. இருந்த போதிலும் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

From around the web