ஆண் குழந்தைக்கு அப்பாவானார் அட்லி! வீடியோ வெளியிட்டு கொண்டாட்டம்!

 
அட்லீ

சந்தோஷத்தில் சிறகடித்து பறக்கிறது இயக்குநர் அட்லி, ப்ரியா ஜோடி. தங்களுக்கு ஆண் குழந்தைப் பிறந்துள்ளதாக  மோஷன் வீடீயோ வெளியிட்டு மகிழ்ச்சியைப் பகிர்ந்திருக்கிறார்கள். ஒரு பக்கம் ரசிகர்கள் இவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வந்தாலும், இன்னொரு புறம், நீங்க கையில வெச்சிருக்கிற ஷூவை அந்த குழந்தையால போடவும் முடியாது.. இப்ப இந்த போட்டோஷூட் பந்தா எல்லாம் தேவையா.. குழந்தை பாக்யத்தால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கீங்க.. மகிழ்ச்சியை இல்லாதவர்களுக்கு ஏதாவது உதவி செய்து கொண்டாடுங்க.. உங்க குழந்தையும் ஆசீர்வதிக்கப்படும் என கமெண்ட் செய்து வருகிறார்கள். 

இயக்குநர் அட்லி தற்போது பாலிவுட்டில் ஷாருக்கானுடன் ‘ஜவான்’ பட வேலைகளில் பிஸியாக உள்ளார். ஷாருக்கின் ‘பதான்’ தெறி ஹிட்டடித்த நிலையில், அட்லியின் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ‘ஜவான்’ படம் ஜூன் மாதம் வெளியாக உள்ளது. 

சீரியல் நடிகை கிருஷ்ண ப்ரியாவைக் காதலித்து கடந்த 2014ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி அட்லி திருமணம் செய்து கொண்ட அட்லி, திருமணமாகி சரியாக 8 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் தனது மனைவி ப்ரியா கர்ப்பமாக இருப்பதை சமூக வலைதளத்தில் அட்லி அறிவித்திருந்தார்.

Atlee

இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் 19-ம் தேதி சென்னையில் பிரியா அட்லியின் வளைகாப்பு நிகழ்வு நடைபெற்றது. இதில் இருவரின் குடும்பத்தினர், திரையுலகினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

இந்நிலையில், அட்லி - பிரியா தம்பதியருக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை இயக்குநர் அட்லி பிரத்யேக மோஷன் வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதில், அவர்கள் சொல்வது சரிதான்.இப்படி ஒரு உணர்வு உலகில் இல்லை.பெற்றோரின் புதிய அற்புதமான சாகசம் இன்று (நேற்று) தொடங்குகிறது. என தெரிவித்துள்ளார். அட்லி - பிரியா தம்பதிக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

From around the web