அக்.6ல் வான்வெளி சாகசம்... மெரினாவில் 70க்கும் மேற்பட்ட விமானங்கள் ஒத்திகை!
அக்டோபர் 8ம் தேதி விமானப்படை தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் அக்டோபர் 6ம் தேதி வான்வெளி சாகசங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வைக் காண பொதுமக்களும் அனுமதிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விமான சாகச ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இந்த சாகச ஒத்திகை நிகழ்ச்சியில் தேஜஸ், சுகாய் 30 எம்கேஐ போர் விமானங்கள், சாரங் ஹெலிகாப்டர்கள் என 70க்கும் மேற்பட்ட விமானங்கள் பங்கேற்றன. இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர். ஒத்திகை நிகழ்ச்சி காரணமாக விமான நிலையத்தில் பயணிகள் விமானங்களின் சேவை நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மெரினா கடற்கரையில் இருந்த மக்கள், இந்த சாகச பயிற்சிகளை கண்டு ரசித்தனர்.
மெரினாவில் அக்டோபர் 4ம் தேதியும் ஒத்திகை நடைபெற உள்ளது. இதேபோல, தாம்பரத்திலும் தொடர்ந்து ஒத்திகை நடந்து வருகிறது. ஒத்திகையின்போது, வழக்கமான விமானங்களை இயக்குவது இடையூறாக இருக்கும் என்பதாலும், பாதுகாப்பு கருதியும் அந்த நேரத்தில் சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுகிறது.
இதற்கிடையே, பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மெரினா கடற்கரை சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் தொலைதூர பைலட் விமான அமைப்புகள், ட்ரோன்கள் மற்றும் எந்தவிதமான பொருட்களையும் பறக்கவிட தடை விதித்து சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். நேற்று அமலுக்கு வந்துள்ள இந்த தடை உத்தரவு அக்டோபர் 6ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!