அதிர்ச்சி... விடிஞ்சா கல்யாணம்... பேச்சுலர் பார்ட்டியில் நண்பர் படுகொலை!
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே, காசிமேஜர்புரம் பகுதியில் வசித்து வருபவர் சூர்யா. இவருக்கு இன்று திருமணம் நடைபெற இருந்த நிலையில், நேற்றிரவு நண்பர்களுக்கு மது விருந்து கொண்டாட்டம் நடைபெற்றது.
அந்த சமயத்தில் முனியா கணேசன் மற்றும் பட்டமுத்து இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு கைகலப்பாக மாறியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த முனியா கணேசன், அரிவாளால் பட்டமுத்துவை வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், தாக்குதலை தடுக்க வந்த பட்டமுத்துவின் நண்பர் அருண்குமாருக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள முனியா கணேசன் உட்பட 3 பேரை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!