தமிழகம் முழுவதும் முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்பு... தமிழக அரசு அறிவிப்பு!

 
மருந்தகம்

தமிழகம் முழுவதும் 1000 முதல்வர் மருந்தகங்கள் அமைக்கப்பட உள்ளன. தகுதியும், ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ளவர்கள் இணையதளம் மூலம் மருந்தகம் அமைப்பதற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

மருந்தகம்

தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ளவர்கள் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். B.Pharm/D.Pharm சான்று பெற்றவர்கள் அல்லது அவர்கள் ஒப்புதலுடன் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ளவர்கள் இதற்காக ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். முதல்வர் மருந்தகம் அமைக்க www.mudhalvarmarunthagam.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 

மருந்தகம்

முதல்வர் மருந்தகங்கள் உருவாக்கப்பட்டு வரும் 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முதல்வர் மருந்தகத்தில் பொதுப்பெயர் மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்கள் பெற்றுக் கொண்டு பயனடையலாம். தமிழ்நாடு முழுவதுமாக சுமார் 1000 முதல்வர் மருந்தகங்கள் ஆரம்ப நிலையில் துவங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web