ராணுவத்தில் அக்னிவீரர் ஆள்சேர்ப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு... ஏப்ரல் 10ம் தேதி கடைசி தேதி!

 
அக்னிவீர்
ஏப்ரல் 10ம் தேதி கடைசி தேதி. தமிழக இளைஞர்களுக்காக இந்திய ராணுவத்தில் அக்னிவீரர் பிரிவுகளுக்கு தூத்துக்குடி, நெல்லை, குமரி உட்பட 16 மாவட்டங்களை சேர்ந்த வரும் ஏப்ரல் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்னிவீரர்

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், “இந்திய ராணுவத்தில் அக்னிவீரர் பல்வேறு பிரிவுகளில் ஆள்சேர்ப்புக்கான பதிவு இப்போது ஆன்லைனில் திறக்கப்பட்டுள்ளது. இப்பணியில் சேர விருப்பமுள்ள திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை ஆகிய 16 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் வரும் ஏப்ரல் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

 

அக்னிவீரர்

இதில் அக்னிவீரர் பொதுப்பணி, தொழில்நுட்ப பிரிவு, அலுவலக உதவியாளர், ஸ்டோர் கீப்பர், டெக்னிக்கல், அக்னிவீரர் டிரேட்ஸ்மேன் 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி ஆகிய பிரிவுகளில் https://164.100.158.23/eligibility-criteria-for-agniveer-recruitment-process.htm என்ற ராணுவ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என திருச்சி கண்டோன்மெண்ட்டில் உள்ள ராணுவ ஆள்சேர்ப்பு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web