சென்னை தனியார் பள்ளியில் மாணவிகள் மீண்டும் மயங்கி விழுந்ததால் பரபரப்பு!

 
திருவொற்றியூர்

 திருவொற்றியூர், கிராமத்தெருவில், விக்டரி மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.  அக்டோபர் 25ம் தேதி, திடீரென விஷவாயு கசிவு ஏற்பட்டதால், பள்ளியில் இருந்த 45 மாணவியர் பாதிக்கப்பட்டு வாந்தி,  மூச்சுத்திணறல், மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக  திருவொற்றியூரில் உள்ள பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

இச்சம்பவம் குறித்து மாசு கட்டுபாட்டு வாரியம், பள்ளி ஆய்வகத்தில் ஆய்வு நடத்தியும் இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை.   தீபாவளி பண்டிகை, சனி, ஞாயிறு உட்பட  தொடர் விடுமுறைக்கு பிறகு இன்று நவம்பர் 4ம் தேதி  மீண்டும் திறக்கப்பட்டது. பெற்றோர் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். இன்று மீண்டும் திடீரென வாயுக்கசிவு காரணமாக,8 மாணவிகளுக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது.

திருவொற்றியூர்

தகவல் அறிந்து பள்ளிக்கு விரைந்த பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து சென்றனர். பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தகவல் அறிந்து  போலீசார், தீயணைக்கும் படையினர்  விரைந்துள்ளனர்.

From around the web