பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு... திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள்!

 
திருவண்ணாமலை கிரிவலம் பெளர்ணமி

பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக  திகழ்கிறது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில். இந்த கோவிலை சுற்றியுள்ள 14 கி.மீ. தூர மலை பாதையில் பக்தர்கள், காலம்காலமாக சுற்றி வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். அது போல் ரிஷிகள், முனிவர்கள், சித்தர்களும் கிரிவலம் வருவதாக சொல்லப்படுகிறது.

இந்த நடைமுறை யார் தொடங்கிவைத்தது என்பது குறித்த தகவல்கள்  தெரியவில்லை. திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதற்கு எல்லா நாட்களும் ஏற்ற நாளாகும். எந்த மாதத்தில் எந்த நாளில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் கிரிவலம் செல்லலாம்.

திருவண்ணாமலை

பௌர்ணமியில் கிரிவலம் சென்றால் நினைத்தது நிறைவேறும்  என்பது நம்பிக்கை.  அந்த வகையில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பௌர்ணமி ஏப்ரல் 12 ம் தேதியான இன்று பங்குனி மாத பௌர்ணமி.  இன்று அதிகாலை 4.13 மணிக்கு தொடங்கி நாளை காலை 6.03 வரை பௌர்ணமி  திதி உள்ளது.  இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பௌர்ணமியில் திருவண்ணாமலை கிரிவலம் செல்வதற்கான நேரத்தை அருணாச்சலேஸ்வரர் கோயில் நிர்வாகமே வெளியிட்டுவிட்டது.

திருவண்ணாமலை

"ஏப்ரல் 12 ம் தேதி அதிகாலை 3.21 மணிக்கு தொடங்கி ஏப்ரல் 13ம் தேதி காலை 05.51 வரை திருவண்ணாமலை கிரிவலம் செல்வதற்கு ஏற்ற நேரமாக கூறப்பட்டுள்ளது. பெளர்ணமி கிரிவலம் செல்லும் பக்தர்கள் இந்த நேரத்தில் தங்களின் கிரிவல வழிபாட்டினை மேற்கொள்ளலாம்" என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web