‘அண்ணாத்த’ டிரெய்லர் வெளியீட்டு தேதி அறிவிப்பு !
Oct 26, 2021, 18:56 IST
தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். தற்போது இவரது நடிப்பில் பிரம்மாண்டமாக அட்டகாசமாக அண்ணாத்த படம் தீபாவளி ரிலீசுக்கு தயாராக உள்ளது.
இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது ரசிகர்களிடயே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இந்தப் படத்தின் டிரெய்லர் நாளை அக்டோபர் 27 மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
சிவா இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம் அண்ணன் தங்கை பாசத்தை அடிப்படையாக கொண்டது. ரஜினிகாந்த்துடன் குஷ்பு மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா என மிகப்பெரிய பட்டாளங்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்க வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார். ரஜினிகாந்த்துக்கு மாபெரும் வெற்றிப் படமாக அமையும் என அவரது வெறித்தனமான ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
From around the
web