அண்ணாத்த படத்தின் ` வா சாமி’ பாடல் வெளியீடு!

 
அண்ணாத்த படத்தின் ` வா சாமி’ பாடல் வெளியீடு!


தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். தற்போது இவருடைய நடிப்பில் அண்ணாத்த படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. அண்ணன், தங்கை பாச பின்னணியை மையமாக கொண்டு உருவாக்கப் பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் டைரக்டர் சிவா இயக்கத்தில் ,வெற்றி ஒளிப்பதிவில் தயாராகி உள்ளது.

அண்ணாத்த படத்தின் ` வா சாமி’ பாடல் வெளியீடு!


இசையமைப்பாளர் டி. இமான் இசையமைப்பில் படத்தில் ரஜினிகாந்துடன் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உட்பட பல நட்சத்திர பட்டாளங்கள் களமிறக்கப் பட்டுள்ளனர்.இந்நிலையில் படத்தின் பாடல்கள் வாரத்திற்கு ஒன்றாக வெளியிடப்பட்டு வருகிறது.

அண்ணாத்த படத்தின் ` வா சாமி’ பாடல் வெளியீடு!

மறைந்த பிண்ணனி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் குரலில் ‘அண்ணாத்த அண்ணாத்த’ பாடல்’ சாரல் காற்றே’ பாடல் ‘மருதாணி’ என ஏற்கெனவே 3 பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடயே பெரும் வரவேற்பு பெற்றுள்ளன.

அண்ணாத்த படத்தின் ` வா சாமி’ பாடல் வெளியீடு!


இந்நிலையில் இன்று மாலை அருண் பாரதி எழுதி முகேஷ், திருமூர்த்தி, சம்சுதீன் ஆகியோர் பாடியுள்ள ‘வா சாமி’ என்ற பாடல் வெளியாகி உள்ளது.இந்த பாடல் சமூக வலைதளத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

From around the web