பெண் சாமியார் அன்னபூரணி அரசுக்கு 3வது திருமணம்.. உதவியாளரை மணந்தார்!
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆசிரமம் அமைத்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வரும் பிரபல பெண் சாமியார் அன்னபூரணி அரசு தனது 2வது கணவர் இறந்த நிலையில், 3வது திருமணம் செய்துக் கொண்டார். 3வதாக தனது உதவியாளராக இருந்து வந்த ரோகித் என்பவரைத் திருமணம் செய்துக் கொண்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் ராஜா தோப்பு கிராமத்தில் அன்னபூரணி அரசு என்ற பெண் சாமியார் ஆசிரமம் அமைத்து பக்தர்களுக்கு அருளாசி கூறி வருகிறார். இந்த ஆசிரமத்தில் பக்தர்களின் வழிபாடு நிகழ்வுகள், அருளாசி வழங்கல் போன்றவை நடைபெற்று வருகின்றன. பெண் சாமியார் அன்னபூரணி அரசுவின் இரண்டாவது கணவர் அரசு உயிரிழந்த நிலையில், அவரது உருவத்தை ஆசிரமத்தில் பக்கத்தில் வைத்து, பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.
பெண் சாமியார் அன்னபூரணியின் இவரது ஆன்மிக சொற்பொழிவுகள், அருளாசிகளைத் தொடர்ந்து அண்டை மாநிலத்தில் இருந்தும் வெளிநாடுகளைச் சேர்ந்த பக்தர்களும் ஏராளமானோர் கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் உள்ள ஆசிரமத்திற்கு வந்து அருளாசி பெற்று செல்வது அதிகரித்து வந்தது.
இந்நிலையில் இவரது உதவியாளராக இருந்த ரோகித் என்பவரை அன்னபூரணி அரசு, தற்போது 3வது திருமணம் செய்து கொள்ள போவதாக கடந்த மாதம் அறிவித்து இருந்த நிலையில், நேற்று இவர்களது திருமணம் நடைபெற்றது.
நேற்று காலை 10 மணியளவில் அன்னபூரணி அரசுக்கும் ரோகித்துக்கும் ஆசிரமத்தில் புரோகிதர்கள் மந்திரங்கள் கூற திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தை அவரது பக்தர்கள் தெய்வீக திருமணம் என கூறி அவர்களிடத்தில் அருளாசி பெற்றுச் சென்றனர். திருமணத்தில் கலந்துக் கொண்ட பக்தர்களுக்கு அறுசுவை உணவு பரிமாறப்பட்டது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!