நாளை 127 காவலர்களுக்கு அண்ணா பதக்கங்கள்.. முதல்வர் அதிரடி!!
நாளை செப்டம்பர்15ம் தேதி அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் தமிழகம் முழுவதும் கோலகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்நாளில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன. குறிப்பாக தமிழக அரசு மாதம் ரூ1000 வழங்கும் மகளிர் உரிமைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை தமிழக முதல்வர் ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் தொடங்கி வைக்கிறார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘’தமிழகத்தில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, சிறைத்துறை, ஊர்க்காவல் படை, விரல்ரேகைப் பிரிவு மற்றும் தடய அறிவியல் போன்ற துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும், தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் நடப்பாண்டில் காவல் துறையில் தலைமைக் காவலர் முதல் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வரையிலான 100 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையில் தீயணைப்பு வீரர் முதல் மாவட்ட அலுவலர் வரையிலான 8 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும், சிறைத்துறையில் முதல்நிலை சிறைக்காவலர் முதல் சிறை கண்காணிப்பாளர் வரையிலான 10 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும், ஊர்க்காவல் படையில் ஊர்க்காவல் படைவீரர் முதல் படைதளபதி வரையிலான 4 ஊர்க்காவல் படை அலுவலர்களுக்கும், விரல்ரேகைப் பிரிவில் 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களுக்கும் மற்றும் தடய அறிவியல் துறை பிரிவில் 2 அலுவலர்கள் துணை இயக்குநர் மற்றும் அறிவியல் அலுவலருக்கும் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன. அவர்களின் மெச்சத்தகுந்த பணியினை அங்கீகரிக்கும் வகையில் "மாண்புமிகு தமிழக முதல்வரின் அண்ணா பதக்கங்கள்" வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!