அதிர்ச்சி.. டூவீலரில் நாயைக் கட்டி இழுத்துச் சென்ற கொடூரம்!

 
நாயை இழுத்துச் சென்ற கொடூரம்

கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் டூ வீலர் ஒன்றில் நாயைக் கட்டி இழுத்துச் சென்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது. இது குறித்த வீடியோ வெளியாகி பலத்த கண்டனங்களைக் குவித்து வருகிறது.
அந்த வீடியோவில், கர்நாடகா மாநிலம், உடுப்பி மாவட்டத்தில் அமைந்துள்ளது மல்லூர் கிராமம். மல்லூர் - ஷிர்வா கிராமத்திற்கு இடையேயான நெடுஞ்சாலையில் ஸ்கூட்டி ஒன்றை நடுத்தர வயது ஆண் ஒருவர் ஓட்டிச் செல்கிறார். அவருடைய ஸ்கூட்டியின் பின்னால் உள்ள பிடியில் தன்னுடைய வளர்ப்பு நாயை சங்கிலியால் கட்டிக் கொண்டு ஸ்கூட்டியை ஓட்டி செல்கிறார். 


அவர் ஸ்கூட்டியை நெடுஞ்சாலையில் ஓட்டிச் சென்றுக் கொண்டிருக்கும் போது, கூடவே சங்கிலியில் கட்டப்பட்ட நாய், தரையில் தரதரவென இழுத்துச் செல்லப்படுகிறது. இதை கவனிக்காத அவர் ஸ்கூட்டியைத் தொடர்ந்து ஓட்டிச் சென்றுக் கொண்டிருக்கிறார். ஆனால், நாய் உஷ்ணம் வழிகிற தார் சாலையில் சிராய்த்துக் கொண்டே ஸ்கூட்டியுடன் இழுத்துச் செல்லப்படுகிறது. இதை அந்த வாகன ஓட்டி வேண்டுமென்றெ சென்றாரா? அல்லது நாய் தரையில் இழுத்துச் செல்லப்படுவது தெரியாமலே வாகனத்தை ஓட்டினாரா? என்பது தெரியவில்லை.

நாய்
இந்த சம்பவத்தை பின்னால் வந்த வாகன ஓட்டி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்தார். நாய் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு வாகனத்தில் இழுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வீடியோவை அடிப்படையாக வைத்து வாகன ஓட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வாகன ஓட்டி மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 
அந்த வாகன ஓட்டி மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விலங்குகள் நல ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web