சாப்பாடு சரி இல்லாததால் ஆத்திரம்.. 85 வயது தாயை கொடூரமாக அடித்து கொன்ற மகன் கைது!
உணவு வழங்குவதில் ஏற்பட்ட தகராறில் தாயை மகன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் சூரத்தில் உத்னா-மக்தல்லா சாலையில் உள்ள பஞ்சஷ்விலியில் வசிக்கும் காந்தி பிஸ்வால் மற்றும் அவரது மனைவி இருவரும் ஜவுளித் தொழிற்சாலையில் பணிபுரிகின்றனர். அவர்கள் ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். காந்தியின் 85 வயதான தாயார், தனது மகனுடன் தங்குவதற்காக ஆறு மாதங்களுக்கு முன்பு இங்கு வந்திருந்தார்.
இவரது மகனும் மருமகளும் வேலை செய்து கொண்டிருந்த போது, அவரது தாய் வீட்டில் சமையல் வேலை செய்து வந்தார். உணவு விஷயத்தில் காந்தி அடிக்கடி தனது தாயுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்நிலையில், மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் சாப்பாடு தொடர்பாக தாயிடம் தகராறு செய்த காந்தி, ஆத்திரமடைந்து அம்மி உரலை எடுத்து அவரது தாயாரின் தலையில் அடித்துள்ளார். இதில் தாயின் தலையில் இருந்து ரத்தம் கொட்டியது. ரத்த வெள்ளத்தில் தன் தாய் சரிந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த காந்தி, வீட்டை விட்டு ஓடி வந்தார்.
பின்னர், அக்கம்பக்கத்தினர், மூதாட்டியின் நிலையை பார்த்து, கதோதரா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தப்பி ஓடிய காந்தியை போலீசார் கைது செய்தனர். போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காந்தியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சூரத் டிஜிபி விஜய் சிங் குஜ்ஜர் தெரிவித்தார்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!