நண்பர் ரஜினிகாந்த் நலமடைந்து இல்லம் திரும்ப வாழ்த்துக்கள் - அன்புமணி ராமதாஸ்!

 
மேகதாது அணை குறித்து கர்நாடக அரசுடன் பேச்சு நடத்தக் கூடாது! – டாக்டர் அன்புமணி ராமதாஸ்

நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக நேற்றிரவு 10.30 மணிக்கு சென்னை கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு வயிற்றில் வீக்கம் ஏற்பட்டதாகவும், செரிமான பிரச்சனைகள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. 

இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நடிகர் ரஜினிகாந்திற்கு பெரியளவிலான அறுவை சிகிச்சைகள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை என்றும், அவர் நலமுடன் இருப்பதாகவும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வரப்படுவதாகவும், ஏற்கெனவே திட்டமிடப்பட்ட பரிசோதனைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் உடல்நிலை சீராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பாமக மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ரஜினிகாந்த் நலம்பெற்று வீடு திரும்ப தனது ட்விட்டர் பக்கத்தில் விரும்பி வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

 நடிகர்   ரஜினிகாந்த்

அதில், “உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நண்பர் நடிகர்  ரஜினிகாந்த்  விரைவாக முழு நலமடைந்து இல்லம் திரும்ப எனது விருப்பங்களைத்  தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web