தீமிதி திருவிழாவில் தீயில் இறங்கிய அமுதா ஐஏஎஸ்... வைரல் போட்டோஸ்!

 
அமுதா ஐஏஎஸ்
 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கத்தில் அமைந்துள்ள  பண்ணாரி மாரியம்மன் கோயில் உலகப் பிரசித்தி பெற்றது. இந்தக் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும்  பங்குனி மாதம் குண்டம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இத்திருவிழாவில் லட்சக்கணக்காண பக்தர்கள்  தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவர்.  அந்த வகையில் நடப்பாண்டிலும் குண்டம் திருவிழா நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் தொடங்கி நடைபெற்று வந்தன.  மார்ச் 11ம்  தேதி இரவு பூச்சாட்டுதல் நிகழ்ச்சியை அடுத்து  குண்டம் திருவிழா தொடங்கியது.   அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. மார்ச் 19ம் தேதி இரவு அம்மன் கோவிலை அடைந்த நிலையில்   இன்று அதிகாலை 2 மணிக்கு சகல வாத்தியங்களுடன் தெப்பக்குளம் சென்று அம்மன் அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

அமுதா ஐஏஎஸ்

அச்சமயம் குண்டத்திற்கு இடப்பட்ட நெருப்பினை சிக்கரசம்பாளையம், இக்கரைநெகமம் புதூர் மற்றும் வெள்ளியம்பாளையம் கிராமங்களில் வசித்து வரும் பெரியவர்கள்  மூங்கில் கம்புகளால் தட்டி நெருப்பினை சீராக பரப்பி 11 அடி நீளம் 5 அடி அகலத்தில் குண்டத்தை தயார் செய்தனர். சரியாக  அதிகாலை 3.50 மணிக்கு பூசாரி பார்த்திபன் குண்டம் இறங்கினார்.  இவரைத் தொடர்ந்து  வரிசையில் காத்திருந்த பக்தர்கள் குண்டம் இறங்க அனுமதிக்கப்பட்டனர். இதற்காக தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருந்து  சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஈரோடு


 இவர்களுடன்  தமிழக உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினார். அமுதா ஐஏஎஸ் ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர். இவர் பல்வேறு கோயில் திருவிழாவில் கலந்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் பண்ணாரி அம்மன் கோயில் திருவிழாவில் கலந்து கொண்டவர், திடீரென குண்டத்தில் இறங்கி ஓடத் தொடங்கினார். இச்சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web