'அமரன்‘ படம் ஓடும் திரையரங்கில் குண்டு வீச்சு… நெல்லையில் பரபரப்பு!

 
அமரன்


திருநெல்வேலி மாவட்டத்தில் தீபாவளிக்கு அமரன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.  படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தாலும் சில இடங்களில்  சர்ச்சையிலும்  சிக்கியது .  அதன்படி  அமரன் படத்தில் முஸ்லிம்களை பயங்கரவாதிகள் போல சித்தரித்து உள்ளதாகவும், எனவே, படத்தை தடை செய்ய வேண்டும் என சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.  

‘அமரன்’

இதனையடுத்து  சென்னை ஆழ்வார்பேட்டையில்  கமல் அலுவலகம் முன்பு  முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். கமல் உருவபொம்மை எரிப்பு, தியேட்டர்கள் முற்றுகை என போராட்டம் செய்து படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக ஏற்கனவே, அமரன் படம் ஓடும் தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், நெல்லை மேலப்பாளையத்தில் அதிகாலையில் அமரன் படம் ஓடும் அலங்கார் திரையரங்கின் முன்பகுதியில் இன்று சில மர்ம நபர்கள் திடீரென பெட்ரோல் குண்டை வீசி சென்றது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமரன் சிவகார்த்திகேயன்

இந்த சம்பவத்தில் யாரெல்லாம் ஈடுபட்டார்கள்? என எந்த விவரமும் வெளியாகவில்லை.
இந்த குண்டு வீச்சு சம்பவத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. இருப்பினும், பெட்ரோல் குண்டை வீசிச் சென்ற மர்ம நபர்கள் யார் என்பது குறித்து  சிசிடிவி பதிவுகள் மூலம்  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web