எப்போதும் சண்டை.. விவாகரத்து கேட்ட மனைவியை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்த கணவன்!
மத்திய பிரதேச மாநிலம் போபாலை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த இவர்களது வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரச்சனைகள் வர ஆரம்பித்தன. சிறு குடும்பச் சண்டைகள் பெரிய பிரச்சனைகளாக மாற ஆரம்பித்தன.
அவ்வப்போது குடும்பச் சண்டை நாளுக்கு நாள் பிரச்சனையாக வெடித்ததால் விரக்தியடைந்த இளம்பெண் கணவரிடமிருந்து விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த பெண்ணின் கணவர் விவாகரத்துக்கு சம்மதிக்கவில்லை. இதனால் குடும்பநல நீதிமன்றத்தில் இவர்களது வழக்கு நிலுவையில் இருந்தது.
இந்நிலையில் கணவன் சமீபத்தில் மனைவியை சந்தித்து விவாகரத்து வழக்கை வாபஸ் பெறுமாறு மிரட்டியுள்ளார். மனைவி சம்மதிக்காததால், வலுக்கட்டாயமாக பலமுறை பலாத்காரம் செய்து விட்டு சென்றுள்ளார். மனைவி அளித்த புகாரின் பேரில் பலாத்காரம் செய்த கணவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!