16 நாட்களுக்கு பிறகு ஒகேனக்கல் அருவிகளில் குளிக்க அனுமதி... சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்!

 
ஒகேனக்கல்


 தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருவியில் நீர்வரத்து  விநாடிக்கு 10,000 கன அடியாக சரிந்துள்ளது. இதனையடுத்து 2 வாரங்களுக்கு பிறகு  ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் மீண்டும் அனுமதி அளித்துள்ளது.காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக இப்பகுதிகளில் அருவிகளில் மழை நீர் கொட்டியது.

ஒகேனக்கல்

இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக 2 வாரங்களாக குளிக்கத் தடை விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது மழைப் பொழிவு குறைந்ததன் காரணமாக காவிரி ஆற்றில் தொடர்ந்து நீர்வரத்து குறையத் தொடங்கியுள்ளது.இதன் காரணமாக, ஒகேனக்கல்லுக்கு வரும் நீர் வரத்தின் அளவானது திங்கட்கிழமை அக்டோபர் 28ம் தேதி  மாலை நிலவரப்படி, விநாடிக்கு 15,000 கன அடியிலிருந்து 10,000 கன அடியாக  குறைந்துள்ளது.

ஒகேனக்கல்
காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்திருந்ததால் கடந்த 16 நாட்களாக தடை விதிக்கப்பட்டிருந்த  நிலையில், தற்போது நீர்வரத்து குறைந்துள்ளது. இதனையடுத்து சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிப்பதற்கு மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி மீண்டும் அனுமதி அளித்துள்ளார். இதனால் ஒகேனக்கல் அருவிகளில் மிதமான அளவில் பாயும் தண்ணீரில் சுற்றுலாப் பயணிகள் குளித்து உற்சாகம் அடைந்தனர்.   

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web