இன்று புதுக்கோட்டை, திருவாரூரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை... மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு!

அதன்படி பங்குனி உத்திர பெருவிழா கடந்த மார்ச் 15 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன்பின்னர் நாள்தோறும் பங்குனி உத்திர திருவிழா உற்சவம், சாமி வீதி உலா ஆகியவை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் இன்று ஏப்ரல் 7ம் தேதி உலகப் பிரசித்தி பெற்ற ஆழித்தேரோட்டம் நடக்க உள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கோடை வெயில் தாக்கத்தால் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வு அட்டவணை மாற்றப்பட்ட நிலையில், இன்று ஏப்ரல் 7ம் தேதி நடக்க இருக்கும் தேர்வுகள் மட்டும் திருவாரூர் மாவட்டத்தில் நாளை ஏப்ரல் 8ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று புதுக்கோட்டை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே நார்த்தாமலையில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்நிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெறுவதையொட்டி, புதுக்கோட்டை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?