அத்தனைப் பேரும் கப்சிப்... நடுரோட்டில் காதலியின் கன்னத்தில் அறைந்த காதலன்.. வைரலாகும் வீடியோ!

 
பளார் காதலன்

என்னதான் பிரச்சனையாக இருந்தாலும், நடுரோட்டில் இப்படியெல்லாம் நடந்துக் கொள்ளக் கூடாது என்று பலரும் காதலனுக்கு அட்வைஸ் செய்து வருகின்றனர். இன்னும் சிலர் அந்த வீடியோவின் கீழ், இப்படியான காதலனை இப்போதே கைகழுவி விடு.. உன் எதிர்காலம் தப்பித்தது என்று காதலிக்கு அட்வைஸ் செய்துக் கொண்டிருக்கிறார்கள். தினசரி அன்றாட நிகழ்வுகளில் ஏதாவது ஒன்று வைரலாவது வாடிக்கை தான். அந்த வகையில்  இளம்பெண்ணை ஒருவரை நடுரோட்டில் கன்னத்தில் பளார் என அறையும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் இந்த வீடியோவை பார்த்து  பெண்ணை அடித்த அந்த நபரை திட்டி தீர்த்து வருகிறார்கள்.வீடியோவில்" ஆண் ஒருவர் கையில் ஒரு போன் ஒன்றை வைத்து கொண்டு பெண்ணை நோக்கி  நடந்து வருகிறார்.  இருவரும் பேசிக்கொண்டு இருக்கும்போது கோபத்துடன் அந்த ஆண் பெண்ணிடம் போனை கொடுத்தார்.

அந்த பெண் போனை கையில்  வாங்கியதும்  ஆத்திரத்தில் இருந்த ஆண் கையை வைத்து பளார் என பெண்ணின் கன்னத்தில் அறைந்தார். அறைந்தவுடன் அதிர்ச்சியடைந்த அந்த பெண்   நிலை தடுமாறினார். நடுரோட்டில் பெண்ணை அடித்தவுடன் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ஒன்றுமே கேட்காமல்  வேடிக்கை பார்க்கத் தொடங்கினர். மேலும் சிலர் வீடியோ எடுக்க ஆரம்பித்தனர்.  கன்னத்தில் அறைந்த அந்த ஆண் பெண்ணை முறைத்து பார்த்தபடியே சென்றார்.

அவர்கள் இருவரும் காதலர்கள் எனவும், இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அந்த பெண்ணை ஆண் அடித்ததாக தெரிகிறது. இந்த வீடியோ வைரலாக பரவி வரும் நிலையில், கண்டிப்பாக நடு ரோட்டில் பெண்ணிடம் வன்முறையில் ஈடுபட்டவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.  என்னதான் கோபமாக இருந்தாலும்  இப்படியா நடுரோட்டில் வைத்து ஒரு பெண்ணை அடிப்பீர்கள்? எனவும்  நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web