வாக்கு எண்ணிக்கைக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார்... தலைமை தேர்தல் ஆணையர்!

 
தேர்தல் ஆணையம்
 

இந்தியா முழுவதும் 18வது மக்களவை தேர்தல்  7  கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. நாளை  ஜூன் 4ம் தேதி  தேர்தலில் பதிவான வாக்குகள்  எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.  வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.  
 தேர்தல் வாக்கு எண்ணிக்கை குறித்து  இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  நாளை இந்தியா முழுவதும் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதற்காக  வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  24 மணி நேரமும் சிசிடிவி காட்சிகள் பதிவு செய்யப்படும்.  தேர்தல் பார்வையாளர்கள் தொடர்ந்து கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள். தேர்தல் முடிவுகள் அங்கு அமைக்கப்பட்ட தேர்தல் முகவர்களிடம் காட்டப்படும்
படிவம் 20ல் தேர்தல் பார்வையாளர் கையொப்பமிடும் போது  வாக்கு எண்ணிக்கை அதிகாரியும் அங்கு இருப்பார்.  ஒவ்வொரு சுற்று முடிவுகளும் உடனுக்குடன் வெளியிடப்படும். இது குறித்த தகவல்களும்   ஊடகங்களுக்கு வழங்கப்படும்.  5 வாக்குகள் ஒப்புகைச் சீட்டுடன் பொருத்தி பார்க்கப்படும். அனைத்து நடவடிக்கைகளும் சிசிடிவி கேமராக்கள் மூலமாக கண்காணிக்கப்பட அனைத்து ஏற்பாடுகளும் தயார்.  
வாக்கு பதிவு எந்திரத்தின் கண்ட்ரோல் யூனிட் செயல்பாடுகள் சிசிடிவி கேமராக்கள் மூலமாக பதிவு செய்யப்படும்.  எத்தனை மணிக்கு தொடங்கி எத்தனை மணிக்கு முடிகிறது என்ற நேரமும் சரிபார்க்கப்பட்டு இது குறித்த விவரங்கள் முகவர்களுக்கு தெரிவிக்கப்படும்.  வாக்கு எண்ணிக்கை அதிகாரியாலும் சரி பார்க்கப்பட்டு பின்னர்  கட்சியின் பெயர் வாக்காளர் பெயர் என்ன அத்தனையும் தெரிவிக்கப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். .

தேர்தல்

நடந்து முடிந்த தேர்தலில் 642 மில்லியன் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இது ஒரு உலக சாதனை. இது 27 ஐரோப்பிய நாடுகளின் வாக்காளர்களை விட 2.5 மடங்கு அதிகம் ஆகும்.மக்களவை வாக்குப்பதிவை சிறப்பாக நடத்தி முடித்துள்ளொம். பெண்கள் இளைஞர்கள் என அனைவரும் இந்த தேர்தல் திருவிழாவில் கலந்து கொண்டு அதை வெற்றிகரமாக செய்துள்ளனர்.  வாக்குப் பதிவிற்காக 135 சிறப்பு ரயில்கள்,  4 லட்சம் வாகனங்கள்,  1692 முறை வான்வெளி  பயணங்கள், 68,793 கண்காணிப்பு குழுக்கள், 1.5 கோடி தேர்தல் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் தீவிரமாக பணியில் ஈடுபட்டனர்.
 2019ல்  540 இடங்களில் மறுவாக்கு பதிவு நடந்த நிலையில் இந்த முறை 39 இடங்களில் மட்டுமே மறுவாக்கு பதிவு நடந்துள்ளது. அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர்  மாநிலங்களில் தான் அதிக அளவில் மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. 

வாக்கு எண்ணிக்கை
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இதுவரை  இல்லாத அளவிற்கு அதிகமாக வாக்குப்பதிவாகியுள்ளது. மணிப்பூரில் பெரிய கலவரம் இல்லாமல் வாக்குப்பதிவு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஷோம்பென் பழங்குடியின மக்கள் முதன் முறையாக வாக்களித்துள்ளனர். பல வர்த்தக நிறுவனங்கள் தாங்களாகவே இலவசமாக தேர்தல் குறித்த விளம்பரங்களை விழிப்புணர்வை செய்து கொடுத்தனர்.
தேர்தலில் பணப்பட்டுவாடா, இலவச பொருட்கள் பட்டுவாடா  பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டது.ரூ 4391 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பிடிக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் பயணங்களை மேற்கொண்ட  முக்கிய தலைவர்களின் ஹெலிகாப்டர்களும் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டது எனத் தெரிவித்துள்ளார்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web