உஷார்... இன்று சென்னையின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் | ஹேப்பி ஸ்ட்ரீட்.. கார் ரேஸ்ன்னு திருப்பி விடுறாய்ங்க!
இன்று சென்னையின் பல முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை சென்னையில் 'ஹேப்பி ஸ்ட்ரீட் ' நிகழ்ச்சி நடைபெற உள்ளதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக சென்னை போக்குவரத்து காவல்துறை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் J-7 வேளச்சேரி போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேளச்சேரி உள்வட்ட சாலையில் இன்று காலை 6 மணி முதல் 9 மணி வரை 'ஹேப்பி ஸ்ட்ரீட் ' நிகழ்ச்சியினை நடத்த 'டைம்ஸ் ஆப் இந்தியா ' நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேற்படி 'ஹேப்பி ஸ்ட்ரீட் ' நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் பின்வருமாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
அதன்படி ஆலந்தூர் மற்றும் ஜிஎஸ்டி சாலையிலிருந்து வேளச்சேரி உள்வட்டச்சாலை வழியாக விஜயநகர் மற்றும் தரமணி நோக்கிச் செல்லும் வாகனங்கள் அனைத்தும் Sunshine School அருகில் வலது புறமாகத் திரும்பி எதிர்புறமுள்ள உள்ள வட்டச்சாலை வழியாகச் சென்று கைவேலி சந்திப்பில் "U" திருப்பம் செய்து ரயில்வே மேம்பாலம் வழியாகச் சென்று இலக்கைச் சென்றடையலாம்.
விஜயநகர் மற்றும் தரமணியிலிருந்து வேளச்சேரி உள்வட்டச் சாலையைப் பயன்படுத்தும் வாகனங்கள் அனைத்தும் வேளச்சேரி ரயில்வே மேம்பாலம் வழியாக கைவேலி சந்திப்பில் U- திருப்பம் செய்து வேளச்சேரி உள்வட்டச்சாலை வழியாகச் சென்று தங்கள் இலக்கைச் சென்றடையலாம்.என தெரிவிக்கப்பட்டுள்ளது
அதே போன்று சென்னையில் கார் ரேஸ் நடைபெறுவதால், காமராஜர் சாலையில் போர் நினைவிடம் நோக்கி செல்லும் வாகனங்கள் உழைப்பாளர் சிலை அருகே திருப்பி விடப்பட்டு வாலாஜா சாலை, அண்ணாசாலை, பெரியார் சிலை, சென்ட்ரல் லைட் பாயின்ட் (மத்திய ரயில் நிலையம்), ஈவிஆர் சாலை வழியாக சென்றடையலாம். மவுண்ட் ரோட்டில் வாலாஜா பாயிண்ட் நோக்கி செல்லும் வாகனங்கள் பல்லவன் சாலையில் சென்ட்ரல் லைட் பாயின்ட் நோக்கி திருப்பி விடப்படும். சிவானந்தசாலை மற்றும் கொடி மரச் சாலை முற்றிலும் மூடப்படும்.
காமராஜர் சாலையிலிருந்து சாந்தோம் நோக்கி செல்லும் வாகனங்களுக்கு எந்த வித போக்குவரத்து மாற்றமும் இல்லை. சென்ட்ரல் லைட்டில் இருந்து அண்ணா சிலை நோக்கி செல்லும் வாகனங்கள் பல்லவன் சாலை சந்திப்பு வரை வழக்கம் போல் செல்லலாம். பல்லவன் சாலை சந்திப்பில் இருந்து பெரியார் சிலை வரை ஒரு வழிப்பாதையானது தற்காலிக இருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. முத்துசாமி சந்திப்பிலிருந்து அண்ணாசாலை மற்றும் கொடி மரச்சாலைகளுக்கு வாகனங்கள் செல்ல அனுமதியில்லை.
அதற்குப் பதிலாக, பல்லவன் சாலை. ஈவிஆர் சாலை, சென்ட்ரல் இரயில்வே நிலையம், பெரியமேடு காந்தி இர்வின் வழியாக சென்று தங்கள் சேர வேண்டிய இலக்கை அடையலாம். நாகர்கோவில்- தாம்பரம் ஸ்பெஷல் ரயில் நீட்டிப்பு கனரக சரக்கு வாகனங்கள் மற்றும் இலகுரக சரக்கு வாகனங்கள்: தீவுத்திடலை சுற்றியுள்ள பிரதான சாலைகள், வாலாஜா சாலை, அண்ணாசாலை, காமராஜர் சாலை, ஈ.வி.ஆர். சாலை, ஆர்.ஏ. மன்றம், முத்துசாமி பாயின்ட், பாரிஸ் கார்னர் ஆகிய இடங்களில் கனரக வாகனங்கள் மற்றும் இலகுரக வணிக வாகனங்கள் செல்ல பிற்பகல் 12.00 மணி முதல் 22.00 மணி வரை செல்ல தற்காலிக தடைசெய்யப்பட்டுள்ளன. இந்த சர்க்யூட், தீவுத் திடல், போர் நினைவுச்சின்னம், நேப்பியர் பாலம், சுவாமி சிவானந்தா சாலை மற்றும் மவுண்ட் ரோடு ஆகியவற்றில் அமைந்துள்ளது.
ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா